/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மின்கம்பத்தில் பழுதை நீக்க பரிதவிக்கும் மின் ஊழியர்கள்
/
மின்கம்பத்தில் பழுதை நீக்க பரிதவிக்கும் மின் ஊழியர்கள்
மின்கம்பத்தில் பழுதை நீக்க பரிதவிக்கும் மின் ஊழியர்கள்
மின்கம்பத்தில் பழுதை நீக்க பரிதவிக்கும் மின் ஊழியர்கள்
ADDED : அக் 08, 2024 04:43 AM

காரைக்குடி, : காரைக்குடியில் சேதமடைந்த மின்கம்பங்களால் அபாயம் நிலவுவதோடு, மின் ஊழியர்கள் போதிய பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் பணி செய்கின்றனர். மேலும் மின்கம்பத்தில் ஏறி பணி செய்ய முடியாத அளவிற்கு மின் கம்பி தவிர இதர ஒயர்களும் அதிக எண்ணிக்கையில் செல்வதால் ஊழியர்கள் சிரமப்படுகின்றனர்.
காரைக்குடி மின் வாரியம் வடக்கு, தெற்கு மற்றும் ஊரகப்பகுதி என மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில், 90 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மின் இணைப்பு உள்ளன.
ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு உதவி செயற்பொறியாளர் அவருக்கு கீழ், போர்மேன், எல்.ஐ., ஹெல்பர்கள் மற்றும் கேங்மேன்கள் உள்ளனர். பல பகுதிகளிலும் மின் ஊழியர்கள் பற்றாக்குறையால் பணியில் தொய்வு ஏற்பட்டது. தவிர நகரின் பல பகுதிகளிலும் சேதமடைந்த நிலையில் மின்கம்பங்கள் நிற்பதால் மக்களுக்கு அபாயம் நிலவுகிறது.
இதுகுறித்து பொதுமக்கள் பலமுறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. இதனால் மழைகாலங்களில் சிறிய அளவில் காற்றடித்தாலே மின்தடை ஏற்படுவது வாடிக்கையாகி வருகிறது.
மின்கம்பங்களில் ஏறி பணி செய்யும் பணியாளர்கள் பலரும் போதிய பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்துவதில்லை. மின் ஊழியர்களுக்கு கோடை மற்றும் மழைக்காலங்களில் வழங்கப்பட வேண்டிய பாதுகாப்பு உபகரணங்களான, பாதுகாப்பு பெல்ட், மின் கடத்தா கையுறை, பாதுகாப்பு கயிறு,பென்சிங் கவசங்கள் வழங்கப்படுவதில்லை என்று புகார் உள்ளது.
மேலும் மின் கம்பி செல்லும் வழியில் அளவிற்கு அதிகமாக கேபிள்கள் செல்வதால் ஏறி பணி செய்ய முடியாத நிலை ஊழியர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
மின் கம்பங்களில் வேறு பயன்பாட்டிற்காக கேபிள் கொண்டு செல்லக்கூடாது என்று உத்தரவு இருந்தும் யாரும் அதனை கண்டுகொள்வதில்லை. மின்வாரிய அதிகாரிகளும் இவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில்லை.