/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
அவசரகதியில் குடிநீர் குழாய் பதிப்பு; வீட்டுச்சுவருக்கு ஆபத்து என அச்சம்

ADDED : பிப் 07, 2024 12:12 AM
சிங்கம்புணரி : சிங்கம்புணரி பேருராட்சியில் ஜல்ஜீவன் குடிநீர் திட்டப்பணிகளுக்காக சிமென்ட் சாலைகளை அவசர கதியில் தோண்டுவதால் அருகிலிருக்கும் குடியிருப்புவாசிகள் அச்சத்தில் உள்ளனர்.
இப்பேரூராட்சியில் மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டத்தில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்க குழாய் பதிக்கும் பணி நடக்கிறது. பல தெருக்களில் இதற்காக ரோடுகள் தோண்டப்பட்டு குழாய் பதிப்பிற்கு பிறகு அவை மீண்டும் மூடப்படுகிறது.
பல இடங்களில் பெரிய மண் அள்ளும் இயந்திரங்களை கொண்டு முழு சாலையும் தோண்டப்படுகிறது.
தார் சாலை, பேவர் பிளாக், மண் சாலைகளை சுலபமாக தோண்டி குழாய்கள் பதிக்கப்படும் நிலையில் நகரில் பல இடங்களில் சிமென்ட் சாலைகளை அவசர கதியில் உடைத்து தோண்டுவதால் ரோட்டை ஒட்டியுள்ள வீடுகளின் சுவர்களில் அதிர்வு ஏற்பட்டு விரிசல் ஏற்படும் நிலை உள்ளது. சம்பந்தப்பட்ட அலுவலர்களின் மேற்பார்வை இல்லாமலும் வீடுகளின் சுவர்களில் ஏற்படும் பாதிப்புகளை மனதில் கொள்ளாமலும் ஒப்பந்தகாரர்கள் பெரிய இயந்திரங்களை கொண்டே சிமென்ட் ரோடுகளை உடைத்து தோண்டிவருகின்றனர்.
எனவே குழாய் பதிக்கும் பணியை அலுவலர்கள் முறையாக பார்வையிட்டு குடியிருப்புகளுக்கு பாதிப்பு வராமல் தடுக்கவேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.