/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ஆசிட் புகை தாக்கி ஊழியர் திணறல் சக பணியாளர்கள் பணி புறக்கணிப்பு
/
ஆசிட் புகை தாக்கி ஊழியர் திணறல் சக பணியாளர்கள் பணி புறக்கணிப்பு
ஆசிட் புகை தாக்கி ஊழியர் திணறல் சக பணியாளர்கள் பணி புறக்கணிப்பு
ஆசிட் புகை தாக்கி ஊழியர் திணறல் சக பணியாளர்கள் பணி புறக்கணிப்பு
ADDED : ஏப் 20, 2025 03:12 AM

சிவகங்கை: சிவகங்கை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், ஆசிட் புகை தாக்கி துாய்மை பணியாளர் காயமடைந்தார். சக பணியாளர்கள் பணி புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிவகங்கை அருகே சாத்தரசன்கோட்டை உடையரேந்தலை சேர்ந்த லிங்கம் மனைவி எஸ்தர், 54; சிவகங்கை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் ஒப்பந்த துாய்மைப் பணியாளராக பணிபுரிந்து வருகிறார்.
நேற்று முன்தினம் ஆய்வுக்கூடத்தை சுத்தம் செய்தபோது, ஆசிட் புகை தாக்கி அவரது முகத்தில் காயம் ஏற்பட்டது.
சிவகங்கை மருத்துவமனையில் முதலுதவி அளித்து, மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
நேற்று காலை 7:00 மணிக்கு, ஒப்பந்த துாய்மை பணியாளர்கள் அனைவரும் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கக் கோரி, பணியை புறக்கணித்து மருத்துவக் கல்லுாரி வாயிலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மதியம் 12:00 மணி வரை நீடித்த போராட்டத்தில் கல்லுாரி பொறுப்பு முதல்வர் விசாலாட்சி, தாசில்தார் சிவராமன் மற்றும் மருத்துவ அதிகாரிகள் பேச்சு நடத்தினர்.
பணியின் போது பாதுகாப்பு உபகரணங்கள் அனைத்தும் முறையாக வழங்கப்படும் என, உத்தரவாதம் அளித்ததையடுத்து பணிக்கு திரும்பினர்.