/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ரோட்டில் திரிந்த மாடுகளை பிடித்த ஊழியர்கள்; சிபாரிசுக்கு வந்த அரசியல் கட்சிகளால் அதிருப்தி

ADDED : நவ 23, 2024 06:26 AM
மானாமதுரை; மானாமதுரை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் போக்குவரத்திற்கு இடைஞ்சலாக சுற்றித் திரியும் மாடுகளை நகராட்சி நிர்வாகத்தினர் பிடித்து சென்றனர்.
அதனை விடுவிக்க அரசியல் கட்சியினர் வரிசைகட்டி சென்றதால் நகராட்சி அதிகாரிகள் செய்வதறியாமல் திகைத்தனர்.
மானாமதுரை நகராட்சிக்குட்பட்ட தாயமங்கலம் ரோடு, வாரச்சந்தை ரோடு, தேவர் சிலை, காந்தி சிலை சிவகங்கை ரோடு, அண்ணாதுரை சிலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நுாற்றுக்கும் மேற்பட்ட மாடுகளும் நாய்களும் சுற்றி திரிவதால் தினந்தோறும் போக்குவரத்து நெரிசலும் ஆங்காங்கே விபத்துக்களும் நடந்து வருகின்றன.
ரோடுகளில் சுற்றி திரியும் மாடுகள் மற்றும் நாய்களை பிடிக்க நகராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர் தினமலர் நாளிதழிலும் அடிக்கடி செய்தி வெளியானது. இந்நிலையில் நேற்று காலை வாரச்சந்தை ரோடு பகுதியில் சுற்றித்திரிந்த 6 மாடுகளை நகராட்சி சுகாதார ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் நகராட்சி ஊழியர்கள் பிடித்து அலுவலக வளாகத்தில் கட்டி வைத்தனர்.
அரசியல் கட்சியினர் மற்றும் சில கவுன்சிலர்கள் மாடுகளை விடுவிக்க கோரி நகராட்சி அலுவலகத்திற்கு வரிசையாக வந்ததால் நகராட்சி அதிகாரிகள் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து நின்றனர்.