/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
வாடகை கட்டடத்தில் இயங்கி வரும் தபால் அலுவலகங்கள்: நெருக்கடியில் ஊழியர்கள் தவிப்பு
/
வாடகை கட்டடத்தில் இயங்கி வரும் தபால் அலுவலகங்கள்: நெருக்கடியில் ஊழியர்கள் தவிப்பு
வாடகை கட்டடத்தில் இயங்கி வரும் தபால் அலுவலகங்கள்: நெருக்கடியில் ஊழியர்கள் தவிப்பு
வாடகை கட்டடத்தில் இயங்கி வரும் தபால் அலுவலகங்கள்: நெருக்கடியில் ஊழியர்கள் தவிப்பு
ADDED : ஏப் 22, 2025 05:56 AM
சிவகங்கை: சிவகங்கையில் தபால் கண்காணிப்பாளர், தலைமை தபால் நிலைய அலுவலகத்திற்கு சொந்த கட்டடம் கட்டித்தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சிவகங்கை தபால் நிலைய கண்காணிப்பாளரின் கீழ் சிவகங்கை, மானாமதுரையில் தலைமை தபால் நிலையம் செயல்படுகிறது. சிவகங்கை தலைமை தபால் நிலையத்தின் கீழ் 20 துணை தபால் நிலையம், 150க்கும் மேற்பட்ட ஊரக தபால் நிலையம் செயல்படுகிறது.
1985ம் ஆண்டில் இருந்தே சிவகங்கையில் தபால் கண்காணிப்பாளர், தலைமை தபால் நிலையம் செயல்படுகிறது. தற்போது கண்காணிப்பாளர் அலுவலகம் முத்துச்சாமி நகரிலும், தலைமை தபால் நிலையம்வாரச்சந்தை ரோட்டில் உள்ள வாடகை கட்டடத்தில் இயங்கி வருகிறது.
இந்த அலுவலகத்தின் கீழ் 500க்கும் மேற்பட்ட அலுவலர், தபால் ஊழியர்கள் பணிபுரிகின்றனர். தபால் கண்காணிப்பாளர், தலைமை தபால் நிலைய அலுவலகத்திற்கு தேவையான அடிப்படை வசதியுடன் கூடிய சொந்த கட்டடம் இன்றி, இடநெருக்கடியான வாடகை கட்டடத்தில் பல ஆண்டாகஇயங்கி வருகிறது.
நாளுக்கு நாள் தபால் துறை வளர்ச்சி காரணமாக வங்கி சேவை, சேமிப்பு, இன்சூரன்ஸ், தங்க பத்திரம் விற்பனை என பல்வேறு சேவைகள் மூலம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், அதற்கேற்ப கட்டட வசதியின்றி தொடர்ந்து பல ஆண்டாக வாடகை கட்டடத்திலேயே தபால் கண்காணிப்பாளர், தலைமை தபால் நிலைய அலுவலகம் செயல்படுகிறது.
அதே நேரம் மானாமதுரை தலைமை தபால் நிலையம் சொந்த கட்டடத்தில் இயங்கி வரும் போது, மாவட்ட தலைநகரான சிவகங்கையில் உள்ள தபால் கண்காணிப்பாளர், தலைமை தபால் நிலைய அலுவலகத்திற்கு சொந்த கட்டடம் இன்றி ஊழியர்கள் தவித்து வருகின்றனர்.
அரசு, சிவகங்கையில் இரு அலுவலகத்திற்கென சொந்தமான கட்டடம் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என தபால் நிலைய ஊழியர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

