நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புத்துார்: திருப்புத்துார் நேஷனல் அகாடமி சமுதாய கல்லூரி மற்றும் குளோபல் மிஷின் மருத்துவமனை இணைந்து வேலைவாய்ப்பு முகாம் நடத்தினர். செவிலியர்களுக்கான வேலைவாய்ப்பு முகாமில் முதல்வர் சுரேஷ் பிரபாகர் வரவேற்றார்.
வி.டி.ஜி.டி.ஏ. (நர்சிங் பிரிவு) படித்த மாணவர்கள் பங்கேற்றனர். குளோபல் மருத்துவமனை பி.ஆர்.ஓ. விவேக் நேர்முகத்தேர்வை நடத்தினார். அதில் 52 மாணவிகள் தேர்வு செய்யப்பட்டனர். ஏற்பாட்டினை பயிற்சி ஆசிரியர்கள் பூவிழி, சாந்தி, ஆனந்தி ஆகியோர் செய்தனர்.