/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திருப்புவனத்தில் பாதியில் விடப்பட்ட ஆக்கிரமிப்பு அகற்றும் பணி
/
திருப்புவனத்தில் பாதியில் விடப்பட்ட ஆக்கிரமிப்பு அகற்றும் பணி
திருப்புவனத்தில் பாதியில் விடப்பட்ட ஆக்கிரமிப்பு அகற்றும் பணி
திருப்புவனத்தில் பாதியில் விடப்பட்ட ஆக்கிரமிப்பு அகற்றும் பணி
ADDED : அக் 19, 2024 05:30 AM

திருப்புவனம்; திருப்புவனம் பழையூரில் ஊருணி ஆக்கிரமிப்பு அகற்றும் பணியை பாதியில் அதிகாரிகள் விட்டு சென்றனர்.
திருப்புவனம் பழையூரில் ரோட்டை ஒட்டி யானைச்சாலை ஊருணி கரையை ஆக்கிரமித்து பல ஆண்டுகளாக 32 பேர் வீடு கட்டி குடியிருந்து வருகின்றனர். உயர்நீதிமன்றம் நீர் நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என உத்தரவிட்டதையடுத்து கடந்த மூன்று வருட காலமாக ஆக்கிரமிப்பாளர்களுக்கு திருப்புவனம் பேரூராட்சி சார்பில் வீடுகளை காலி செய்ய வலியுறுத்தி நோட்டீஸ் அனுப்பினர்.
நேற்று இறுதி நாள் என குறிப்பிட்டு வீடுகளில் நோட்டீஸ் ஒட்டி இருந்தனர். நேற்று காலை திருப்புவனம் தாசில்தார் விஜயகுமார், இன்ஸ்பெக்டர் சிவகுமார், செயல் அலுவலர் சங்கர் கணேஷ் மற்றும் போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தொடங்கியது.
முன்னெச்சரிக்கையாக வீடுகளுக்கு வழங்கப்பட்ட மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு மின் மீட்டர்களை மின்வாரியத்தினர் எடுத்துச் சென்றனர். ஆக்கிரமிப்பு அகற்றும் போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாற்று இடம் வழங்கிய பின் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் எனக் கூறி சாலை மறியலில் ஈடுபட்டனர்.
போலீசார் சமரசப்பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து ஒரு மாத காலத்திற்குள் ஆக்கிரமிப்பை தாங்களாகவே அகற்றி கொள்கிறோம் என தெரிவித்தனர்.
ஆக்கிரமிப்பு அகற்ற வந்த அதிகாரிகள் பெயரளவில் ஏற்கனவே எம்.ஜி.ஆர்., மன்றம் செயல்பட்டு வந்த இடத்தில் கற்கள், மரக்கட்டைகள் குவித்து வைக்கப்பட்டிருந்தன. அவற்றை அகற்றி அதிகாரிகள் சுத்தம் செய்தனர்.
பாதிக்கப்பட்ட கண்ணன் கூறுகையில்: 40 வருடங்களாக ஆக்கிரமிப்பு என அதிகாரிகளுக்கு தெரியாதா இதுவரை வீட்டு வரி வசூலித்துள்ளனர்.
40 வருடங்களாக மின் கட்டணம் கட்டியுள்ளோம், எனவே ஆக்கிரமிப்புக்கு துணை போன அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

