/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திருப்புவனத்தில் ஆக்கிரமிப்பு அகற்றம்
/
திருப்புவனத்தில் ஆக்கிரமிப்பு அகற்றம்
ADDED : ஜூன் 05, 2025 01:21 AM

திருப்புவனம்: திருப்புவனத்தில் பத்து வருடங்களுக்கு பின் நேற்று ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டதால் ரோடு விசாலமாக காட்சியளித்தது.
மதுரை - ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் திருப்புவனம் அமைந்துள்ளது. திருப்புவனம் வழியாக பரமக்குடி, கமுதி, இளையான்குடி, ராமேஸ்வரம், மதுரை உள்ளிட்ட ஊர்களுக்கு 100க்கும் மேற்பட்ட பஸ்கள் சென்று வருகின்றன.
சாலையை பலரும் ஆக்கிரமித்து கடைகள் அமைத்துள்ளதால் வாகனங்கள் போக்குவரத்து நெருக்கடியில் சிக்கி தவிக்கின்றன.
நேற்று ஆர்.டி.ஓ., விஜயகுமார், தாசில்தார் விஜயகுமார், நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் முத்தீஸ்வரன், இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார், எஸ். ஐ., சிவப்பிரகாஷ், செயல் அலுவலர் சங்கர் கணேஷ் தலைமையில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடந்தது.
புதூர் பகுதியில் இன்று காலையில் மீண்டும் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்