தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ காரைக்குடி ரஸ்தா குப்பை கிடங்கை பார்வையிட்ட இன்ஜி., மாணவர்கள்

 காரைக்குடி ரஸ்தா குப்பை கிடங்கை பார்வையிட்ட இன்ஜி., மாணவர்கள்

 காரைக்குடி ரஸ்தா குப்பை கிடங்கை பார்வையிட்ட இன்ஜி., மாணவர்கள்


ADDED : ஜன 21, 2026 05:42 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 21, 2026 05:42 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

காரைக்குடி: காரைக்குடி ரஸ்தாவில் மாநகராட்சி சார்பில், குப்பை கிடங்கில் செயல்பட்டு வரும் நுண்உர செயலாக்க மையத்தை திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த இன்ஜி., கல்லூரி மாணவர்கள் பார்வையிட்டனர்.

காரைக்குடி மாநகராட்சியில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். 300-க்கும் மேற்பட்ட துாய்மை பணியாளர்கள் பணி செய்து வருகின்றனர். வீடுகள் தோறும் தூய்மை பணியாளர்கள் மூலம், மட்கும் குப்பை, மட்காத குப்பை என தரம் பிரிக்கப்பட்டு குப்பை சேகாரமாகிறது.

இவ்வாறு சேகரமாகும் குப்பை அந்தந்த பகுதிகளில் குவிக்கப்பட்டு, லாரிகள் மூலம் தேவகோட்டை ரஸ்தாவில் உள்ள குப்பை கிடங்கு மற்றும் நுண்உர செயலாக்க மையங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது.

காரைக்குடியில் நாள் ஒன்றுக்கு 46 மெட்ரிக் டன் வரை குப்பை சேகரமாகிறது. காரைக்குடியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் குப்பை கழிவு தரம் பிரிக்கப்படுகிறது. அதில் நுண் உர செயலாக்க மையங்களின் மூலம் 15 மெட்ரிக் டன் உரமாக்கப்படுகிறது. மேலும் மாநகராட்சி மற்றும் தனியார் நிறுவனம் மூலம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டு சிமென்ட் ஆலைக்கு எரிபொருளாக பயன்படுத்தப்படும் கழிவு தினமும் 10 மெட்ரிக் டன் அனுப்பி வைக்கப்படுகிறது. இதன் மூலம் மாநகராட்சிக்கு வருமானம் கிடைப்பதோடு குப்பை கழிவும் அகற்றப்படுகிறது.

இந்நிலையில், நேற்று தொட்டியம் கொங்குநாடு இன்ஜி., கல்லூரி மாணவர்கள் மையத்தை பார்வையிட்டனர். மையத்தின் தனியார் நிறுவன உரிமையாளர் மணிகண்டன் குப்பை தரம் பிரித்து உரமாக்கப்படுவது குறித்து விவரித்தார்.

பேராசிரியர் கனகா கூறுகையில்: சிவில் இன்ஜி. படிக்கும் இறுதியாண்டு மாணவர்களின் பாடத்திட்டத்தில் குப்பைகளை தரம் பிரிப்பது குறித்த பாடத்திட்டம் உள்ளது. எவ்வாறு செயல்படுகிறது என்பதை மாணவர்களுக்கு நேரடியாக காட்டுவதன் மூலம், ப்ராஜெக்ட் செய்ய பயனுள்ளதாக அமையும். பல மாவட்டங்களில் திட்டம் செயல்படுத்தப்பட்டாலும் காரைக்குடியில் சிறப்பாக செயல்படுகிறது என்பதை அறிந்து இங்கு பார்வையிட வந்தோம் என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us