நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாச்சியாபுரம் : கும்மங்குடி விவேகானந்தா பாலிடெக்னிக் கல்லுாரியில் திருப்புத்துார் சிவில் இன்ஜினியர்ஸ் அசோசேசியனுடன் இணைந்து பொறியாளர் தினவிழா கொண்டாடப்பட்டது.
அமைப்பியல் துறை தலைவி ஆண்ட்ரூஸ் ஹெப்சியா வரவேற்றார். முதல்வர் சசிக்குமார் துவக்கவுரையாற்றினார். அரும்ராஜ் பில்டர்ஸ் நிறுவனர் அருணாச்சலம் ஒருங்கிணைத்தார். அசோசேசியன் தலைவர் சையது ஜாபர், செயலாளர் கௌதம் செண்பக், பொருளாளர் முகமது அலி ஆகியோர் பேசினர்.