/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
தொழில் முனைவோர், புத்தாக்க சான்று படிக்க விண்ணப்பம் கலெக்டர் தகவல்
/
தொழில் முனைவோர், புத்தாக்க சான்று படிக்க விண்ணப்பம் கலெக்டர் தகவல்
தொழில் முனைவோர், புத்தாக்க சான்று படிக்க விண்ணப்பம் கலெக்டர் தகவல்
தொழில் முனைவோர், புத்தாக்க சான்று படிக்க விண்ணப்பம் கலெக்டர் தகவல்
ADDED : அக் 07, 2024 05:16 AM
சிவகங்கை: தமிழ்நாடு மற்றும் அகமதாபாத் தொழில் முனைவோர் மேம்பாடு, புத்தாக்க நிறுவனம் சார்பில் ஓராண்டு சான்றிதழ் படிப்பு துவக்கியுள்ளதாக கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: தொழில் முனைவோர், புத்தாக்க சான்றிதழ் வகுப்பு நவ., 4 முதல் துவக்கப்பட உள்ளது. இதற்கு கட்டணம் ரூ.80,000 மட்டுமே. அங்கீகரிக்கப்பட்ட பல்கலை, கல்லுாரியில் இருந்து பட்டம், பட்டயம், ஐ.டி.ஐ., பிளஸ் 2, பத்தாம் வகுப்பு படித்திருப்பதுடன், தொடர் புடைய பயிற்சியில் 2 ஆண்டு அனுபவம் உள்ளவர்கள் சேரலாம்.
சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த தொழில் முனைவோர், இச்சான்றிதழ் படிப்பில் சேர https://oneyearcourse.editn.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
கூடுதல் விபரத்திற்கு 97905 35243 என்ற எண்ணிலும் பேசி அறிந்து கொள்ளலாம், என்றார்.