ADDED : நவ 02, 2025 04:25 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புத்துார் : திருமயம் லேனா விலக்கு மவுண்ட் சீயோன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் முன்னாள் மாணவர் சங்கம் சார்பில் தொழில்முனைவு திறன் வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது.
துறைத் தலைவர் இளவரசி வரவேற்றார். கல்வி குழும தலைவர் ப்ளாரன்ஸ் ஜெயபரதன் தலைமை வகித்தார். பெங்களூரு விண்ட் ரிவர் சிஸ்டம்ஸ் இன்டர்நேஷனலில் பணியாற்றும் பாலசுப்பிர மணியன் வார முடிவில் ஒரு தினத்தை திறன் மேம்பாடு மற்றும் கற்றலுக்கு அர்ப்பணிக்க வேண்டும்' என்றார்.
இயக்குனர் ஜெய்சன் கீர்த்தி ஜெயபரதன், ஒருங்கிணைப்பாளர், முதல்வர் பால முருகன், முதன்மையர் (ஐ.சி.டி) ராபின்சன் பேசினர்.

