/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பயிர் காப்பீட்டிற்கு அவகாசம் விவசாயிகள் எதிர்பார்ப்பு
/
பயிர் காப்பீட்டிற்கு அவகாசம் விவசாயிகள் எதிர்பார்ப்பு
பயிர் காப்பீட்டிற்கு அவகாசம் விவசாயிகள் எதிர்பார்ப்பு
பயிர் காப்பீட்டிற்கு அவகாசம் விவசாயிகள் எதிர்பார்ப்பு
ADDED : நவ 02, 2025 04:24 AM
திருப்புத்துார் : தாமதமான மழையால் தாமதமாக நெல் சாகுபடி துவங்கியுள்ள விவசாயிகளுக்கு காப்பீடு செய்ய கூடுதல் அவகாசம் தர விவசாயிகள் கோரியுள்ளனர்.
திருப்புத்துார் வட்டாரத்தில் மழை பொழிவு குறைவாக உள்ளது. மேலும் தாமதமான மழையால் விவசாயப்பணிகளை விவசாயிகள் தாமதமாகவே துவங்குகின்றனர். அக்.ல் துவங்கி நவம்பரிலும் நடவு,விதைப்பு பணிகள் நடக்கின்றன. இந்நிலையில் நெல்பயிருக்கான காப்பீடு செய்ய நவ.15ல் பதிவு காலம் முடிகிறது. தற்போது விவசாயிகள் வயல்களில் விதைப்பு, நாற்று நடவு, நாற்றுக்களை வெளியூரில் வாங்குதல் என்று மும்முரமாக உள்ளனர்.
இதனால் காப்பீடுக்கான கால அவகாசம் திருப்புத்துார் பகுதி விவசாயிகளுக்கு போதுமானதாக இல்லை. இது போன்ற மழை தாமதமான மாவட்டத்தின் பல பகுதிகளிலும் இந்நிலையே உள்ளது. இதனை உறுதி செய்து விவசாயிகளுக்கு காப்பீடு செய்ய கூடுதல் அவகாசம் வழங்க விவசாயிகள் கோரியுள்ளனர்.