/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிவகங்கையில் நிற்காத எர்ணாகுளம்--வேளாங்கண்ணி ரயில்
/
சிவகங்கையில் நிற்காத எர்ணாகுளம்--வேளாங்கண்ணி ரயில்
சிவகங்கையில் நிற்காத எர்ணாகுளம்--வேளாங்கண்ணி ரயில்
சிவகங்கையில் நிற்காத எர்ணாகுளம்--வேளாங்கண்ணி ரயில்
ADDED : ஆக 19, 2025 07:51 AM
சிவகங்கை: எர்ணாகுளம்-வேளாங்கண்ணி வாராந்திர சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் சிவ கங்கையில் நிற்காதததால் பயணிகள் அதிருப்தி அடைந்துள்ளனர். அந்த ரயிலை மாவட்ட தலைநகரான சிவகங்கையில் நின்று செல்ல தெற்கு ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எர்ணாகுளத்தில் இருந்து (வண்டி எண்: 06061) ஆக.,27 மற்றும் செப்., 3, 10 ஆகிய நாட்களில் இரவு 11:50 மணிக்கு புறப்பட்டு செங்கோட்டை, தென்காசி, சிவகாசி, அருப்புக்கோட்டை, மானாமதுரை, காரைக்குடி, அறந்தாங்கி, திருவாரூர் வழியாக மறுநாள் காலை 11:55 மணிக்கு வேளாங்கண்ணி சென்று சேரும்.
அதே போன்று வேளாங்கண்ணியில் (வண்டி எண்: 06062) இருந்து ஆக.,28, செப்.,4 மற்றும் 11 ஆகிய நாட்களில் மாலை 6:40 மணிக்கு புறப்படும் இந்த ரயில் அதே வழித்தடத்தில் மறுநாள் காலை 11:55 மணிக்கு எர்ணாகுளம் சென்று சேரும்.
இவ்விரு வழித்தடத்திலும் இயக்கப்பட உள்ள வேளாங்கண்ணி - எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயில் மாவட்ட தலைநகரான சிவகங்கையில் நின்று செல்லாது என்ற தெற்கு ரயில்வேயின் அறிவிப்பால், சிவகங்கை பயணிகள் அதிருப்தியில் உள்ளனர்.
எனவே மானாமதுரை, காரைக்குடியில் நின்று செல்வது போன்றே, சிவகங்கையிலும் இந்த ரயில் நின்று செல்ல வேண்டும் என ரயில் பயணிகள் தெற்கு ரயில்வே நிர் வாகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.