நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை : பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கென நடந்த கட்டுரை, ஓவியம், பேச்சு, வினாடி வினா போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு  நடந்தது.
சிவகங்கை அரசு மகளிர் கல்லுாரியில் வனத்துறை சார்பில் உலக ஈரநில தினத்தை முன்னிட்டு மாணவர்களுக்கான ஓவியம், பேச்சு, கட்டுரை, வினாடி வினா போட்டி நடந்தது. இதில் முதல் மூன்று இடங்களை பிடித்த பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா  நடந்ததது. மாவட்ட வன அலுவலர் பிரபா தலைமை வகித்தார். தி.மு.க., அயலக அணி மாவட்ட தலைவர் சரவணன் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றினை வழங்கினார். வனச்சரக அலுவலர், வனவர், அலுவலர்கள் பங்கேற்றனர்.

