/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
அடிப்படை பிரச்னை கூட தீர்க்கப்படவில்லை
/
அடிப்படை பிரச்னை கூட தீர்க்கப்படவில்லை
ADDED : ஏப் 29, 2025 05:21 AM
மானாமதுரை: மானாமதுரை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மக்களின் அடிப்படை பிரச்னைகள் கூட தீர்க்கப்படாமல் உள்ளதாக கவுன்சிலர்கள் நகராட்சி கூட்டத்தில் குற்றம் சாட்டினர்.
மானாமதுரை நகராட்சி கூட்டம் தலைவர் மாரியப்பன் கென்னடி தலைமையில் நடந்தது.துணைத்தலைவர் பாலசுந்தரம் முன்னிலை வகித்தார்.கமிஷனர் ஆறுமுகம், பொறியாளர் பட்டுராஜன் வரவேற்றனர்.
அ.தி.மு.க., கவுன்சிலர்கள்தெய்வேந்திரன், கங்காதேவி: மானாமதுரை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மக்களின் அடிப்படை பிரச்னைகளான கழிவுநீர், தெருவிளக்கு, ரோடு உள்ளிட்டவை கூட நீண்ட மாதங்களாக தீர்க்கப்படாமல் உள்ளது.
அவுட்சோர்சிங் முறையில் நடைபெறும் துப்புரவுபணிகள் முழுமையாக இல்லாமல் அரை,குறையாக நடைபெறுவதால் நகராட்சி நிதி வீணாகிறது.ஆகவே நகராட்சி பணியாளர்களை வைத்தே துப்புரவு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
புருஷோத்தமன், காங்.,: பயணியர் விடுதி எதிர்புறம் உள்ள மகாகவி பாரதியார் தெருவில் கழிவுநீர் செல்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசகுழி மயானத்தில் இரவு நேரங்களில் மின்விளக்கு வசதி இல்லாததால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குஉள்ளாகி வருகின்றனர்.
சதீஷ்குமார் தி.மு.க.,: சித்திரை திருவிழா தேரோட்டம் நடைபெற உள்ள நிலையில் விரைவாக தேரோடும் வீதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும், கழிவுநீர் கால்வாய்களை அடிக்கடி துார்வார வேண்டும்.
நகராட்சி தலைவர் மாரியப்பன் கென்னடி, கமிஷனர் ஆறுமுகம், பொறியாளர் பட்டுராஜன்: கவுன்சிலர்களின் கோரிக்கைகளுக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.