/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
முன்னாள் ராணுவ வீரர் தொழில் துவங்க ரூ.1 கோடி வரை கடன்
/
முன்னாள் ராணுவ வீரர் தொழில் துவங்க ரூ.1 கோடி வரை கடன்
முன்னாள் ராணுவ வீரர் தொழில் துவங்க ரூ.1 கோடி வரை கடன்
முன்னாள் ராணுவ வீரர் தொழில் துவங்க ரூ.1 கோடி வரை கடன்
ADDED : ஏப் 02, 2025 06:33 AM
சிவகங்கை : முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டத்தில் முன்னாள் ராணுவ வீரர், பணியின் போது உயிரிழந்த வீரர்களின் கைம்பெண்கள் பயன்பெறலாம் என கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது, முன்னாள் ராணுவ வீரர்கள் நலனுக்காக முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டம் துவக்கப்பட்டுள்ளது. இதில், முன்னாள் ராணுவ வீரர்கள், உயிரிழந்த வீரர்களின் கைம்பெண்கள் தொழில் துவங்க வங்கிகள் மூலம் ரூ.1 கோடி வரை கடன் பெற வழிவகை செய்யப்படும். இக்கடனில் தொழில் துவங்கும் தொகையில் 30 சதவீதம் மூலதன மானியம், 3 சதவீத வட்டி மானியம் வழங்கப்படும். திறன் மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சியும் வழங்கப்படும். இத்திட்டத்தில் பயன்பெற முன்னாள் ராணுவ வீரர் வயது வரம்பு இல்லை.
இதில் பயன் பெற விரும்புவோர் சிவகங்கை முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம், என்றார்.