நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புவனம் : திருப்புவனம் மேற்கு ஒன்றிய தி.மு.க., சார்பில் செயற்குழு கூட்டம் அவைத்தலைவர் இளங்கோவன் தலைமையிலும், ஒன்றிய செயலாளர் வசந்தி முன்னிலையிலும் நடந்தது.
கூட்ட தீர்மானங்கள் குறித்து மாவட்ட துணை செயலாளர் சேங்கைமாறன் உரையாற்றினார். பாக முகவர்கள் கூட்டம் நடத்தவும், மாவட்டத்திலேயே அதிகளவு தேர்தல் நிதி வழங்கவும் முடிவு செய்யப்பட்டது.
நகர செயலாளர் நாகூர் கனி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பொற்கோ, மாவட்ட பிரதிநிதிகள் ஈஸ்வரன், சுப்பையா, மீனவரணி அண்ணாமலை உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

