/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
எதிர்பார்ப்பு:அரசு மூலிகை கொள்முதல் நிலையம் அமைத்து கொள்முதல் செய்தால் பயனுள்ளதாக இருக்கும்
/
எதிர்பார்ப்பு:அரசு மூலிகை கொள்முதல் நிலையம் அமைத்து கொள்முதல் செய்தால் பயனுள்ளதாக இருக்கும்
எதிர்பார்ப்பு:அரசு மூலிகை கொள்முதல் நிலையம் அமைத்து கொள்முதல் செய்தால் பயனுள்ளதாக இருக்கும்
எதிர்பார்ப்பு:அரசு மூலிகை கொள்முதல் நிலையம் அமைத்து கொள்முதல் செய்தால் பயனுள்ளதாக இருக்கும்
ADDED : செப் 21, 2024 05:40 AM

மலையும் மலை சார்ந்த பகுதியுமாக விளங்கும் இவ்வொன்றியத்தில் ஏராளமான மூலிகை செடிகள் வளர்ந்துள்ளன. சிங்கம்புணரி ஒன்றியத்துக்கு உட்பட்ட பிரான்மலை, செல்லியம்பட்டி, மேலப்பட்டி, ஒடுவன்பட்டி மலைத்தொடர்களில் சித்த மருந்துகளுக்கு உபயோகப்படும் அரியவகை மூலிகை செடிகள், மூலிகை மரங்கள் அதிகம் உள்ளன.
பல்வேறு மாவட்டங்களில் இருந்து வரும் மூலிகை மருந்து தயாரிப்பாளர்கள் இப்பகுதி மக்களிடம் சொற்ப விலைக்கு மூலிகை செடிகளை சேகரித்து வாங்கி செல்கின்றனர். அச்செடிகள் மூலம் மருந்து தயாரிக்கப்பட்டும், மதிப்பு கூட்டப்பட்டும் விற்பனைக்கு செல்கிறது.
இந்நிலையில் இவ்வொன்றியத்தில் சமீபகாலமாக பல்வேறு காரணங்களால் விவசாயம் கடுமையாக பாதித்து விவசாயிகள் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர்.
குறிப்பாக பருவநிலை மாறுபாடு மற்றும் அதிகப்படியான வெயில் மழை என பயிர்கள் பாதிப்பு தொடர்கிறது.
காட்டு மாடுகள், கோயில் மாடுகள் பிரச்னையால் இன்னொரு புறம் விவசாயம் செய்ய முடியாமல் பலர் நிலத்தை தரிசாக போட்டுள்ளனர்.
இந்நிலையில் விவசாயம் செய்யாத இடங்களில் முழுவதுமாகவும், விவசாய நிலங்களில் ஊடுபயிராகவும் மூலிகைச் செடிகளை வளர்க்க விவசாயிகளை ஊக்கப்படுத்தினால் இப்பகுதியில் விவசாய முறை மாற உதவும்.
இதற்காக சுற்று வட்டாரத்தில் அரசு மூலிகை நாற்றங்கள் பண்ணைகளை அமைத்து அனைத்து விவசாயிகளுக்கும் சப்ளை செய்வதுடன் சேகரித்துக் கொண்டு வரப்படும் மூலிகைகளை அரசு சித்த மருத்துவ துறைக்கு கொள்முதல் செய்து சித்த மருந்துகள் தயாரிக்க பயன்படுத்தலாம். இதன் மூலம் இவ்வொன்றியத்தில் விவசாயிகளின் நிலை மேம்படும், வேலை வாய்ப்பு பெருகும்.
ஏ.வி.நாகராஜன், பா.ஜ., மாவட்ட துணைத்தலைவர், பொன்னடப்பட்டி: பிரான்மலை, எஸ்.புதூர் பகுதியில் அரிய வகை மூலிகை செடிகள் ஏராளமாக வளர்ந்துள்ளன.
இவற்றை பலர் சொற்ப விலை கொடுத்து சேகரித்து செல்கின்றனர்.
மலைத்தொடர்களில் மட்டுமே வளரக்கூடிய மூலிகை செடிகளும் இங்கு அதிகம் உள்ளது. எனவே தேவைப்படும் விவசாயிகளுக்கு அரசே அது போன்ற மூலிகை நாற்றங்கால்களை கொடுத்து வளர்ந்து பிறகு, அரசு மூலிகை கொள்முதல் நிலையம் அமைத்து கொள்முதல் செய்தால் பயனுள்ளதாக இருக்கும், என்றார்.