/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மழையை நம்பி விவசாயம் துவக்கம் கை கொடுக்குமா என எதிர்பார்ப்பு
/
மழையை நம்பி விவசாயம் துவக்கம் கை கொடுக்குமா என எதிர்பார்ப்பு
மழையை நம்பி விவசாயம் துவக்கம் கை கொடுக்குமா என எதிர்பார்ப்பு
மழையை நம்பி விவசாயம் துவக்கம் கை கொடுக்குமா என எதிர்பார்ப்பு
ADDED : அக் 19, 2025 05:45 AM

காரைக்குடி: காரைக்குடி அருகே உள்ள திருவேலங்குடியில் மழையை நம்பி விவசாயிகள் விவசாயப் பணியில் தீவிரம் காட்டி வரு கின்றனர்.
சாக்கோட்டை ஒன்றியத்தில் 4 ஆயிரம் எக்டேரில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது.
மானாவாரி விவசாயமே அதிகளவில் நடைபெறுகிறது. தற்போது மாவட்டத்தின் பல பகுதிகளிலும் தொடர் மழை பெய்துள்ளதால் விவசாயிகள் விவசாய பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
காரைக்குடி அருகே உள்ள தி. சூரக்குடி ஊராட்சிக்குட்பட்ட திருவேலங்குடியில் விவசாயிகள் விவசாயப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
விவசாயி செல்வி கூறுகையில்: இப்பகுதியில், புதுக்கண்மாய், தெற்கு புதுக்கண்மாய், நவக்கண்மாயை நம்பி விவசாயம் நடந்து வருகிறது.
தற்போது பெய்து வரும் தொடர் மழையை நம்பி நெல் விதைப்பில் ஈடுபட்டுள்ளோம். உழவு உரம் விதைநெல் என ஏக்கருக்கு 20 ஆயிரம் வரை விவசாயிகள் செலவு செய்துள்ளனர்.
தொடர் மழை பெய்தால் மட்டுமே பயிர்களை காப்பாற்ற முடியும். தை மாதம் அறுவடைப்பணி நடைபெறும்.