/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
காலாவதியான நுாடுல்ஸ் ரூ.5 ஆயிரம் அபராதம்
/
காலாவதியான நுாடுல்ஸ் ரூ.5 ஆயிரம் அபராதம்
ADDED : மார் 22, 2025 04:57 AM
திருப்புவனம்: திருப்புவனத்தில் காலாவதியான நுாடுல்ஸ் பாக்கெட் விற்பனை செய்த கடைக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து கோட்டாட்சியர் உத்தரவிட்டார்.
திருப்புவனம் மெயின்ரோட்டில் கடை ஒன்றில் நுாடுல்ஸ் பாக்கெட்டை கடந்தாண்டு டிசம்பரில் இருவர் வாங்கி சாப்பிட்டதில் உடல் நல குறைவு ஏற்பட்டது. நுாடுல்ஸ் டப்பாவில் 2023 டிசம்பர்25ல் தயாரிக்கப்பட்டதாகவும், ஆகஸ்ட் 24, 2024க்குள் பயன்படுத்த வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தது. காலாவதியாகி நான்கு மாதங்கள் ஆன பொருளை விற்பனை செய்துள்ளனர்.
இதுகுறித்து உணவு பாதுகாப்பு அலுவலர் சிவகுமார் சம்பந்தப்பட்ட கடையில் ஆய்வு மேற்கொண்டு காலாவதியான நுாடுல்ஸ் பாக்கெட் ஒன்று மற்றும் மசாலா பாக்கெட்களை பறிமுதல் செய்தார். காலாவதியான பொருட்கள்விற்பனை குறித்து சிவகங்கை கோட்டாட்சியர்விஜயகுமார் விசாரணை நடத்தி கடைக்கு ஐயாயிரம் ரூபாய் அபராதம் விதித்தார்.