/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கண்துடைப்பு: தேவகோட்டையில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி: முக்கிய ரோடுகளில் நெருக்கடி அதிகரிப்பு
/
கண்துடைப்பு: தேவகோட்டையில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி: முக்கிய ரோடுகளில் நெருக்கடி அதிகரிப்பு
கண்துடைப்பு: தேவகோட்டையில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி: முக்கிய ரோடுகளில் நெருக்கடி அதிகரிப்பு
கண்துடைப்பு: தேவகோட்டையில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி: முக்கிய ரோடுகளில் நெருக்கடி அதிகரிப்பு
ADDED : ஜன 20, 2025 05:24 AM
தேவகோட்டை: தேவகோட்டையில் கண்துடைப்பாக மட்டுமே ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டதால், மீண்டும் நகரில் போக்குவரத்து நெருக்கடி அதிகரித்து வருகின்றன.
தேவகோட்டையில் புதிய டி.எஸ்.பி. பொறுப்பேற்றவுடன் அதிகரித்து வரும் ஆக்கிரமிப்பு பற்றியும், போக்குவரத்து நெருக்கடி பற்றியும், அவரது கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. மேலும் கடைகளின் விளம்பர போர்டுகளும் ரோடுவரை வைக்கப்பட்டது. கடைகளின் பொருட்கள் கடைகளுக்குள் இருப்பதை விட ரோட்டில் தான் அதிகம் இருந்தது. திருப்புத்தூர் ரோட்டில் ராம்நகர் முதல் ஒத்தக்கடை பஸ் ஸ்டாப் வரையும், வெள்ளையன் ஊரணியை சுற்றி ரோடே காணாத வகையில் ஆக்கிரமிப்பு, சிலம்பணி சிதம்பர விநாயகர் கோவில் சன்னதி வீதி உட்பட வர்த்தக நிறுவனங்கள், வங்கிகள், பள்ளிகள், போக்குவரத்து அதிகமுள்ள ரோடு ஆக்கிரமிப்பு எந்த வித கட்டுப்பாடும் இல்லாமல் நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. டி.எஸ்.பி. கவுதமின் கவனத்திற்கு கொண்டு சென்றதை தொடர்ந்து அவரே நேரில் நடந்து சென்று ஆக்கிரமிப்பை அகற்றும்படி கூறினார். இரண்டு நாள் அவகாசம் கொடுத்தும் பலனில்லாத நிலையில் அவருடைய நேரிடையான பார்வையில் கடந்த 20 தினங்களுக்கு முன் ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கையில் இறங்கினார். திருப்புத்தூர் ரோட்டில் பஸ் ஸ்டாண்ட் கிழக்கே செல்லும் ரோட்டில் மட்டும் ஆக்கிரமிப்பு அகற்றினார். மேற்கே செல்லும் ரோட்டில் ஆக்கிரமிப்பை திரும்பி பார்க்கவில்லை . மறு நாள் ஆக்கிரமிப்பு அகற்றம் நடைபெறும் என எதிர்பார்த்ததில் ஏமாற்றம் தான் மிஞ்சியது. அதிகாரிகளிடம் கேட்டதில் அவகாசம் கேட்டதால் கொடுத்திருப்பதாகவும் தெரிவித்தனர். திடீரென என்ன காரணத்தாலோ அதிகாரிகள் கப்சிப் ஆகிவிட்டனர். பாரபட்சமின்றி அகற்றம் நடைபெறும் போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு கிடைக்கும் என எதிர்பார்த்த வாகன ஓட்டிகள், பஸ் டிரைவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இதனால், பஸ்களை திரும்ப முடியாமல் அவதிக்குள்ளாகினர்.
* மீண்டும் அதிகரிக்கும் ஆக்கிரமிப்பு:
கடைகள் முன்பிருந்த தற்காலிக கூரையை கூட அகற்றக்கூறினர். இதனால், பாரபட்சமின்றி ஆக்கிரமிப்பு அகற்றப்படும் என நம்பினர். ஆனால், நகரின் பெரும்பாலான பகுதிகளில் ஆக்கிரமிப்பு அகற்றாமல் கண்துடைப்பாக நடந்தது. அது மட்டுமின்றி ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட பகுதிகளில் மீண்டும் ஆக்கிரமிப்பு துவங்கி விட்டது. ராம்நகரிலிருந்து பஸ் ஸ்டாண்ட் வரை டீக்கடைகள் ஆக்கிரமிக்க துவங்கிவிட்டன. இந்த ரோடு வழியே தான் சப்- கலெக்டர், டி.எஸ்.பி., நெடுஞ்சாலை, நகராட்சி அதிகாரிகள் சென்று வருகின்றனர். மீண்டும் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியை மேற்கொண்டு, போக்குவரத்து நெருக்கடிக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
///