/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
விவசாயி தலை துண்டித்து கொலை; பிடிக்க முயன்ற எஸ்.ஐ.,க்கு மிரட்டல்; விரட்டிய போலீஸ் காயம்
/
விவசாயி தலை துண்டித்து கொலை; பிடிக்க முயன்ற எஸ்.ஐ.,க்கு மிரட்டல்; விரட்டிய போலீஸ் காயம்
விவசாயி தலை துண்டித்து கொலை; பிடிக்க முயன்ற எஸ்.ஐ.,க்கு மிரட்டல்; விரட்டிய போலீஸ் காயம்
விவசாயி தலை துண்டித்து கொலை; பிடிக்க முயன்ற எஸ்.ஐ.,க்கு மிரட்டல்; விரட்டிய போலீஸ் காயம்
ADDED : ஜூலை 29, 2025 05:17 AM

சிவகங்கை; சிவகங்கை அருகே நாட்டாகுடியில் விவசாயி தலையை துண்டித்து கொலை செய்த வழக்கில் முக்கிய நபரான சமயதுரை போலீசாரை தாக்க முயற்சித்து தப்பினார்.
சிவகங்கை அருகே நாட்டாகுடியை சேர்ந்தவர் விவசாயி சோணைமுத்து 65. இவரது குடும்பம் மதுரையில் வசிக்கிறது. குடும்பத்தை பிரிந்து 7 ஆண்டுகளாக நாட்டாகுடியில் தங்கி விவசாயம் செய்து வந்தார். ஜூலை 20 மதியம் 1:00 மணிக்கு வீட்டின் முன்பு திண்ணையில் அமர்ந்திருந்த சோணைமுத்துவை டூவீலரில் வந்த இருவர் வாளால் வெட்டி தலையை துண்டித்து கொலை செய்தனர்.
சோணைமுத்து தலையை மட்டும் எடுத்துக்கொண்டு டூவீலரில் தப்பினர். எதிரே வந்த பாண்டி 66 என்பவரையும் வெட்டினர்.
டூவீலரில் தப்பிய இருவரும் சோணைமுத்துவின் தலையோடு சிவகங்கை வந்தனர். சூரக்குளம் அருகே உள்ள கண்மாய்கரையில் மது அருந்தியுள்ளனர்.
போலீசார் வருவதையறிந்த இருவரும் தப்பினர். டி.புதுார் கண்மாயில் சோணைமுத்துவின் தலை மட்டும் கிடந்தது.
நாட்டாகுடி முருகேசன் மகன் சமயதுரை 25, பி.வேலாங்குளம் முத்துப்பாண்டி மகன் சிங்கமுத்து 25 ஆகியோர் மீது சந்தேகம் இருப்பதாக சோணைமுத்து அண்ணன் மகன் அழகர்சாமி திருப்பாச்சேத்தி போலீசில் புகார் அளித்தார். சிங்கமுத்துவை போலீசார் கைது செய்தனர்.
போலீசார் விசாரணையில், நாட்டாகுடி அருகே உள்ள கண்மாயில் மீன் பிடிக்கும்போது சமயதுரை குறித்து சோணைமுத்து அவதுாறாக பேசியதாகவும், அதை சமயதுரையிடம் சிங்கமுத்து கூறியதால் விரோதம் ஏற்பட்டதும், போதையில் வந்து சோணைமுத்துவிடம் தகராறில் ஈடுபட்டு தலையை துண்டித்து எடுத்துச்சென்று டி.புதுார் கண்மாயில் வீசியதும் தெரியவந்துள்ளது.
எஸ்.ஐ.,க்கு மிரட்டல் கொலை நடந்து ஒருவாரம் கடந்த நிலையில் முக்கிய நபரான சமயதுரையை போலீசார் பிடிக்கமுடியவில்லை. சமயதுரையை பிடிப்பதற்கு எஸ்.பி., சிவபிரசாத் எஸ்.ஐ., சரவணன் தலைமையில் தனிப்படை அமைத்துள்ளார்.
சிவகங்கை பஸ் ஸ்டாண்ட் அருகே சமயதுரையை பிடிக்க முயன்றபோது வாளால் தாக்க முயற்சி செய்து தப்பியுள்ளார். அவரை விரட்டி சென்றதில் போலீஸ்காரர் பொன்ராஜ் டூவீலரில் இருந்து விழுந்து காயம் அடைந்து சிகிச்சை பெற்றுள்ளார். இதையடுத்து சமயதுரையை பிடிக்க போலீஸ் தீவிரநடவடிக்கையில் இறங்கியுள்ளது.

