ADDED : மே 16, 2025 03:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பாச்சேத்தி: திருப்பாச்சேத்தி அருகே கல்லுாரணியில் கரும்பு வயலில் தோகை கழிவு களுக்கு வைத்த தீயில் சிக்கி விவசாயி உயிரிழந்தார்.
கல்லுாரணியைச் சேர்ந்தவர் ராஜாக்கிளி 83, இவர் கல்லுாரணியில் வயலை குத்தகைக்கு எடுத்து கரும்பு பயிரிட்டுள்ளார். கரும்பு வயலில் கழிவுகளுக்கு நேற்று மாலை தீ வைத்துள்ளார்.
காற்று பலமாக வீசி அருகில் இருந்த மற்றொருவரின் கரும்பு வயலுக்கு பரவும் அபாயம் இருந்ததால் தனியாக தீயை அணைக்க முயன்ற போது அதில் சிக்கி உயிரிழந்தார். திருப்பாச்சேத்தி போலீசார் விசாரிக்கின்றனர்.