/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மானியத்தில் பிளாஸ்டிக் குழாய் கிடைக்காமல் விவசாயிகள் தவிப்பு
/
மானியத்தில் பிளாஸ்டிக் குழாய் கிடைக்காமல் விவசாயிகள் தவிப்பு
மானியத்தில் பிளாஸ்டிக் குழாய் கிடைக்காமல் விவசாயிகள் தவிப்பு
மானியத்தில் பிளாஸ்டிக் குழாய் கிடைக்காமல் விவசாயிகள் தவிப்பு
ADDED : செப் 28, 2025 06:55 AM
திருப்புவனம்: சிவகங்கை மாவட்டத்தில் வேளாண் பொறியியல் துறை மூலம் பிளாஸ்டிக் குழாய்கள் வழங்கப் படாததால் விவசாயிகள் தவிப்பிற்குள்ளாகி வருகின்றனர்.
வேளாண் பொறியியல் துறை மூலம் பம்ப் செட் வைத்துள்ள விவசாயி களுக்கு மான்ய விலையில் பிளாஸ்டிக் குழாய்கள் வழங்கப்படுகின்றன. பிளாஸ்டிக் குழாய்கள் மூலம் விவசாய நிலங்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவதால் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த முடியும், விவசாயிகளுக்கு கிணறு ஒரு இடத்திலும் 50 மீட்டர் தள்ளி மற்ற இடத்தில் விவசாய நிலங்களும் இருப்பது வழக்கம், அதனால் மண்ணுக்கு அடியில் குழாயை பதித்து பாதுகாப்பாக கொண்டு செல்லலாம். கொய்யா, தென்னை, மா உள்ளிட்ட மரங்களுக்கு சொட்டு நீர் பாசனம் மூலம் தண்ணீர் பாய்ச்ச நீண்ட தூரத்திற்கு பிளாஸ்டிக் குழாய்கள் தான் பயனளிக்கும்.
பிளாஸ்டிக் குழாய்கள் தேவை குறித்து அந்தந்த வட்டாரத்திலும், மாவட்ட வேளாண் பொறியியல் துறையிலும் விவசாயிகள் பதிவு செய்வார்கள், முன்னுரிமை அடிப்படையில் பிளாஸ்டிக் குழாய்கள் வழங்கப்படும், கடந்த மூன்று வருடங்களுக்கும் மேலாக பிளாஸ்டிக் குழாய்கள் வழங்கப்படுவதில்லை. அதற்கு பதிலாக கருப்பு ரப்பர் குழாய் வழங்கப்படுகின்றன.
விவசாயிகள் கூறுகையில், கருப்பு ரப்பர் குழாய்களில் தண்ணீர் அதிக அழுத்தத்துடன் செல்வதில்லை. மழை காலங்களில் ரப்பர் குழாய்கள் வளைந்து கொடுப்பதால் பாசனத்திற்கு முழுமையாக தண்ணீரை பாய்ச்ச முடியவில்லை.
எனவே மீண்டும் பிளாஸ்டிக் குழாய்கள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.