/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
நிலங்களில் கண்மாய் நீர் புகுந்தது பயிர் முளைத்ததால் விவசாயிகள் வேதனை

ADDED : ஜன 18, 2024 05:56 AM

மானாமதுரை : கட்டிக்குளத்தில் வைகை பாசன கால்வாய் மூலம் நெல் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது.
கட்டிக்குளம் கண்மாய்க்கு வைகை ஆற்றில்இருந்து கால்வாய் மூலம் தண்ணீர் வந்து தற்போது முழுமையாக நிரம்பி உபரி நீர் அருகிலுள்ள மிளகனுார் கண்மாய்க்கு செல்கிறது.
இதேபோன்று புதுக்குளம் பகுதிகளில் உள்ள கண்மாய்கள் நிரம்பி அதன் உபரி நீரும் மிளகனுார் கண்மாய்க்கு சென்று வரும் நிலையில் மிளகனூர் கண்மாய் அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ள நிலையில் அதன் கலுங்கை திறக்காத காரணத்தினால் இக்கண்மாய் தண்ணீர் கட்டிக்குளம் பகுதியில் உள்ள 25 ஏக்கர்விளை நிலங்களுக்குள் புகுந்ததால் அப்பகுதியில் உள்ள நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி முளைக்க துவங்கி உள்ளது.
கட்டிக்குளம் விவசாயி பாரிவள்ளல் கூறுகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த தொடர் மழையின் காரணமாக நெற்பயிர்கள் சாய்ந்து விட்டன.
மிளகனுர் கண்மாய் நிரம்பியும் அதன் கலுங்கை திறந்து விடாமல் கண்மாய் நீர் வயல்களுக்குள் புகுந்ததால் நெற்பயிர்கள் மூழ்கி முளைத்தும், அழுகியும் வருகின்றன. இதனால் மிகுந்த நஷ்டம் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.