/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கத்தரியில் நோய் தாக்குதலால் விவசாயிகள் தவிப்பு: திருப்புவனம் வட்டார அளவில் பாதிப்பு
/
கத்தரியில் நோய் தாக்குதலால் விவசாயிகள் தவிப்பு: திருப்புவனம் வட்டார அளவில் பாதிப்பு
கத்தரியில் நோய் தாக்குதலால் விவசாயிகள் தவிப்பு: திருப்புவனம் வட்டார அளவில் பாதிப்பு
கத்தரியில் நோய் தாக்குதலால் விவசாயிகள் தவிப்பு: திருப்புவனம் வட்டார அளவில் பாதிப்பு
ADDED : ஏப் 28, 2025 05:57 AM

திருப்புவனம்: திருப்புவனம் வட்டாரத்தில் ஒரே நேரத்தில் கத்தரி செடியில் மூன்று நோய்கள் தாக்கியதால் விளைச்சல் கடுமையாக பாதித்துள்ளதாக விவசாயிகள் புலம்பி வருகின்றனர்.
திருப்புவனம் வட்டாரத்தில் சொக்கநாதிருப்பு, பனையனேந்தல், வெள்ளிக்குறிச்சி, அல்லிநகரம், கலியாந்தூர் உள்ளிட்ட பகுதிகளில் கத்தரி விவசாயம் செய்து வருகின்றனர். இங்கு கலர், வெள்ளை, வரி கத்தரி வகைகள் விளைவிக்கப்படுகின்றன. மதுரை காய்கறி மார்கெட்டில் திருப்புவனம் கத்தரிக்காய்க்கு தனி மவுசு உண்டு. நெல் அறுவடை செய்த வயல்களில் கத்தரி பயிரிடுகின்றனர். கோடை காலத்தில் குறைந்த அளவு தண்ணீர் தேவை, பராமரிப்பு செலவு குறைவு, தினசரி வருமானம் என்பதால் விவசாயிகள் கத்தரி சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். ஏக்கருக்கு 10 முதல் 15 ஆயிரம் ரூபாய் செலவு செய்கின்றனர். பயிரிடப்பட்டு 90வது நாளில் இருந்து கத்தரிக்காய் அறுவடை செய்யப்படுகிறது. நான்கு நாட்கள் இடைவெளியில் கத்தரி அறுவடை செய்தால் ஏக்கருக்கு 135 கிலோ வரை கிடைக்கும். பனையனேந்தல், சொக்கநாதிருப்பு உள்ளிட்ட பகுதிகளில் கலர் கத்தரிக்காய் பயிரிட்டு 75 நாட்கள் ஆன நிலையில் கத்தரியில் குருத்துப்பூச்சி, வெள்ளை கொசு, சந்தனப்பூச்சி, செம்பேனி நோய் தாக்குதல் ஏற்பட்டுள்ளது. இலைக்கு கீழே குடியேறும் பூச்சிகள் இலைகளை கடித்து சேதப்படுத்துகிறது. இதனால் காய்ப்பு திறன் குறைந்து விடுகிறது. ஒரு செடியில் பத்து முதல் 15 காய்கள் வரை கிடைக்கும் நிலையில் ஒரு சில காய்கள் மட்டுமே கிடைக்கிறது. குருத்துப்பூச்சி தாக்குதலால் செடிகள் வளர்வதே இல்லை. செடிகள் வளர வளர காய்கள் அதிகம் விளையும், செடிகள் வளராததால் காய்களும் கிடைக்கவில்லை. ஏக்கருக்கு 135 கிலோ அறுவடை செய்த நிலையில் தற்போது வெறும் 45 கிலோ மட்டுமே கிடைக்கிறது.
* கத்தரி கிலோ ரூ.10க்கு மலிவு:
இது குறித்து விவசாயி ஜெயகுரு கூறியதாவது, கத்தரியில் ஒரே நேரத்தில் பல நோய்கள் தாக்கியுள்ளன. தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் கண்டு கொள்வதே இல்லை. இதனால் தனியார் உர கடைகளில் மருந்து வாங்கி தெளிக்க வேண்டிய நிலை உள்ளது. இதற்காக வாரத்திற்கு ரூ.ஆயிரம் வரை செலவிடுகிறோம். நோய் தாக்கிய இலைகள், செடிகளை அகற்றி விட்டு மருந்து தெளித்தால் ஒரளவிற்கு பூச்சிகளை கட்டுப்படுத்த முடியும், நோய் தாக்குதலால் விளைச்சல் பாதித்துள்ளன. மதுரை காய்கறி மார்க்கெட்டில் கடந்த வாரம் கத்தரி கிலோவிற்கு ரூ.25 வழங்கினர். ஆனால், தற்போது ரூ.10 ஆக குறைத்து வாங்குகின்றனர், என்றார்.