/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கண்மாயில் தண்ணீர் இருந்தும் மடை மூடியதால் பாய்ச்ச முடியாமல் விவசாயிகள் கவலை
/
கண்மாயில் தண்ணீர் இருந்தும் மடை மூடியதால் பாய்ச்ச முடியாமல் விவசாயிகள் கவலை
கண்மாயில் தண்ணீர் இருந்தும் மடை மூடியதால் பாய்ச்ச முடியாமல் விவசாயிகள் கவலை
கண்மாயில் தண்ணீர் இருந்தும் மடை மூடியதால் பாய்ச்ச முடியாமல் விவசாயிகள் கவலை
ADDED : ஜன 04, 2024 02:12 AM

மானாமதுரை: மானாமதுரை அருகே தீயனுாரில் கண்மாயில் தண்ணீர் தேங்கி இருந்தாலும் அவற்றை வெளியேற்றும் மடை சேதமடைந்துள்ளதால் விவசாயிகள் பம்ப் செட் வைத்து குழாய் மூலம் வயல்களுக்கு தண்ணீர் பாய்ச்சும் நிலை ஏற்பட்டுள்ளது.
மானாமதுரை அருகே உள்ள மேலப்பசலை பஞ்சாயத்திற்குட்பட்ட தீயனுார் கிராமத்தில் நுாற்றுக்கணக்கான குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.இவர்களின் பிரதான தொழிலாக விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு இருந்து வருகிறது.பெய்த மழை காரணமாக தற்போது தீயனுார் கண்மாயில் தண்ணீர் தேங்கியுள்ளது. ஆனால் கண்மாயில் உள்ள 3 மடைகள் சேதமடைந்து பல ஆண்டுகளாகி விட்டதால் இப்பகுதியில் விவசாயம் செய்ய முடியாமல் விவசாயிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இந்த மடைகளை சீரமைக்க அதிகாரிகளிடம் கிராம மக்கள் பலமுறை மனு கொடுத்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இப்பகுதியில் விவசாயம் பொய்த்து போன நிலையில் இந்த வருடம் கண்மாயில் தண்ணீர் தேங்கியுள்ளதால் ஏராளமான விவசாயிகள் மோட்டார்களை வைத்து குழாய் மூலம் வயல்களுக்கு தண்ணீரை பாய்ச்சி வருகின்றனர்.
விவசாயிகள் கூறுகையில், கடந்த 6 வருடங்களுக்கு முன்பு மடையை சீரமைப்பதாக கூறி மணல் மற்றும் ஜல்லிகளை கொட்டினர். அதற்குப் பிறகு வேலை எதுவும் செய்யாமல் கொட்டிய மணலையும்,ஜல்லியையும் அள்ளி சென்று விட்டனர். வருடம் தோறும் மோட்டார்களை வைத்து விவசாய நிலங்களுக்கு குழாய் மூலம் தண்ணீர் பாய்ச்சி வருகிறோம். இதனால் கூடுதல் செலவு ஏற்பட்டு வருகிறது. அதிகளவில் விளைச்சல் இருந்தால் தான் வருமானம் கிடைக்கும், விளைச்சல் இல்லாவிட்டால் நஷ்டத்திற்கு மேல் நஷ்டம் தான் ஏற்படும் என்றனர்.