/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் செயல்படாத எல்.இ.டி., டி.வி., விவசாயிகள் புகார்

ADDED : பிப் 03, 2025 05:30 AM

காரைக்குடி: காரைக்குடி அருகே மானகிரி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விலை பட்டியல் வெளியிடப்படும், எல்.இ.டி., டி.வி., பயன்பாடின்றி கிடப்பதாக விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.
இங்கு, உலர்களம், கோடவுன், ஆய்வு கூடம், வியாபாரிகள் ஓய்வு விடுதி, ஏலம் நடக்கும் அரங்குடன் செயல்படுகிறது. இங்குள்ள பொருட்கள், அதன் விலைவிபரங்கள் எல்.இ.டி., டி.வி., மூலம் ஒளிபரப்பு செய்யப்படும். இந்த எல்.இ.டி., டி.வி., பொருத்தி 6 மாதங்களுக்கு மேலாகியும், பயன்பாட்டிற்கு வராமல் முடங்கி கிடப்பதாக விவசாயிகள் புகார் தெரிவித்தனர். எல்.இ.டி., டி.வி., பொருத்திய நிலையில் விலை பட்டியல் வெளியிடும் சாப்ட்வேர் அப்டேட் செய்யாததால், முடங்கி கிடப்பதாக தெரிவிக்கின்றனர்.