/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திருப்பாச்சேத்தியில் தடுப்பணை விவசாயிகள் கோரிக்கை
/
திருப்பாச்சேத்தியில் தடுப்பணை விவசாயிகள் கோரிக்கை
ADDED : டிச 16, 2024 06:51 AM
திருப்பாச்சேத்தி : திருப்பாச்சேத்தி வைகை ஆற்று படுகையில் நிலத்தடி நீராதாரத்தை உயர்த்த தடுப்பணைகள் அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பாச்சேத்தி, கானுார், கல்லுாரணி, மீனாட்சிபுரம், மழவராயனேந்தல், செம்பராயனேந்தல் உள்ளிட்ட பகுதிகளில் நெல், வாழை, கரும்பு, தென்னை விவசாயம் நடைபெறுகிறது.
வருடத்தில் 3 மாதங்கள் மட்டுமே வைகை ஆற்றில் நீர்வரத்து இருக்கும். மற்ற காலங்களில் நீர்வரத்து இன்றி காணப்படும். திருப்பாச்சேத்தி வைகை ஆற்று படுகையில் இருந்து கட்டனுார் கூட்டு குடிநீர் திட்டம், திருப்பாச்சேத்தி கூட்டு குடிநீர் திட்டம் உள்ளிட்ட கூட்டு குடி நீர் திட்டங்கள் செயல்படுத்தப் படுகின்றன.
கோடை காலத்தில் நிலத்தடி நீர்மட்டம் குறைவதால் குடிநீர் விநியோகம் பாதிப்பதுடன், விவசாயமும் பாதிக்கப்படுகிறது. திருப்பாச்சேத்தி பகுதியில் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த தடுப்பணை அமைக்க வேண்டும். திருப்புவனம் வைகை ஆற்றில் மாரநாடு தடுப்பணைக்கு அடுத்து கட்டிகுளம் தடுப்பணை தான் அமைந்துள்ளது.
இடையில் 10 கி.மீ., துாரத்திற்கு தடுப்பணை கிடையாது. எனவே திருப்பாச்சேத்தி வைகை ஆற்று படுகையில் தடுப்பணை அமைத்தால் சுற்று வட்டார பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் உயரும். எனவே பொதுப்பணித்துறை அதிகாரிகள் திருப்பாச்சேத்தி பகுதியில் தடுப்பணை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.