/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சீராகுமா உடைந்த மடை விவசாயிகள் எதிர்பார்ப்பு
/
சீராகுமா உடைந்த மடை விவசாயிகள் எதிர்பார்ப்பு
ADDED : மார் 20, 2025 05:59 AM

சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே உடைந்து தண்ணீர் வீணான கண்மாய் மடை சீரமைக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகள் உள்ளனர்.
இவ்வொன்றியத்தில் வேங்கைப்பட்டி அருகே உள்ள புதுக்கண்மாய் 80 ஏக்கர் பரப்பு கொண்டது. இக்கண்மாய்க்கு 300 ஏக்கர் பாசன நிலங்கள் உள்ள நிலையில் அவற்றில் 250 ஏக்கரில் ஆண்டுதோறும் நெல் சாகுபடி செய்கின்றனர். இதன் மடைகள் 20 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட நிலையில் கடந்தாண்டு டிச. 8ஆம் தேதி ஒரு மடையில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணானது.
500க்கும் மேற்பட்ட ஏக்கர் பயிர்கள் தண்ணீரில் மூழ்கின. இதைத் தொடர்ந்து கடும் போராட்டத்திற்கு பிறகு உடைப்பு தற்காலிகமாக அடைக்கப்பட்டது. விவசாயிகள் கவனமுடன் தண்ணீரை பாய்ச்சி, தாற்போது அறுவடை முடிந்துள்ளது. மடை உடைப்பால் இனி வரும் காலங்களில் மழை பெய்யும் போது தண்ணீரை 10 சதவீதம் கூட சேமிக்க முடியாத நிலை உள்ளது.