/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சாய்ந்த நிலையில் மின்கம்பம் அச்சத்தில் விவசாயிகள்
/
சாய்ந்த நிலையில் மின்கம்பம் அச்சத்தில் விவசாயிகள்
ADDED : நவ 22, 2024 04:25 AM

சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே பாசன வயல் வழியாக செல்லும் உயரழுத்த மின்கம்பங்கள் எப்போது வேண்டுமானாலும் சாயலாம் என்ற ஆபத்தான நிலையில் உள்ளதால் விவசாயிகள் அச்சத்துடன் உள்ளனர்.
இவ்வொன்றியத்தில் அ.காளாப்பூர் ஊராட்சிக்குட்பட்ட மட்டிவயல் வழியாக செல்லும் 2 மின்கம்பங்கள் சாய்ந்த நிலையில் உள்ளது. தற்போது மழை பெய்து விவசாய பணிகள் துவங்கியுள்ள நிலையில் மின்கம்பம் மேலும் சாய்ந்து வருகிறது.
இதனால் விவசாயிகள் அச்சத்துடன் விவசாய பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இனி வரும் காலங்களில் தொடர் மழை காரணமாக மின் கம்பங்கள் சாய்ந்து அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் அதற்கு முன் சரி செய்ய அப்பகுதி விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.