/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திருப்புவனத்தில் காணாமல் போன சர்வீஸ் ரோடு விவசாயிகள் தவிப்பு
/
திருப்புவனத்தில் காணாமல் போன சர்வீஸ் ரோடு விவசாயிகள் தவிப்பு
திருப்புவனத்தில் காணாமல் போன சர்வீஸ் ரோடு விவசாயிகள் தவிப்பு
திருப்புவனத்தில் காணாமல் போன சர்வீஸ் ரோடு விவசாயிகள் தவிப்பு
ADDED : நவ 16, 2025 11:09 PM

திருப்புவனம்: மதுரை -- பரமக்குடி 4 வழிச்சாலையில் சர்வீஸ் ரோடுகள் முழுமையடையாமலும் ஆக்கிரமிப்புகள் அதிகரித்தும் இருப்பதால் விவசாயிகள், பொதுமக்கள் தவிப்பிற்குள்ளாகியுள்ளனர்.
மதுரையில் இருந்து பரமக்குடி வரை நான்கு வழிச்சாலையும் அதன் பின் ராமநாதபுரம் வரை தலா பத்து மீட்டர் அகலம் கொண்ட இரு வழிச்சாலையும் அமைக்கப்பட்டு வாகனப் போக்குவரத்து நடந்து வருகிறது.
மதுரையில் இருந்து ஏற்கனவே தேசிய நெடுஞ்சாலை உள்ள நிலையில் பைபாஸ் ரோட்டுக்காக விவசாயிகள் பலரும் தங்களது விளைநிலங்களை வழங்கினர்.
மதுரை- - பரமக்குடி நான்கு வழிச்சாலையில் சிலைமான், மணலூர், லாடனேந்தல், திருப்புவனம் உள்ளிட்ட ஒன்பது இடங்களில் 900 மீட்டர் முதல் ஒரு கி.மீ., நீளமுள்ள உயர்மட்ட மேம்பாலங்கள் அமைக்கப்பட்டன. கீழடி விலக்கில் கூடுதலாக ஒரு மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது.
மேம்பாலங்கள் அமைக்கப்படும் போதே சர்வீஸ் ரோடுகளும் போடப்பட்டன. மணலுார், லாடனேந்தல் உள்ளிட்ட பாலங்களில் சர்வீஸ் ரோடு பணி முழுமையடையாமல் பாதியில் விடப்பட்டன.
2017 முதல் வாகனப் போக்குவரத்து தொடங்கிய நிலையில் சர்வீஸ் ரோடு இல்லாததால் விவசாயிகள், பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். லாடனேந்தலில் சர்வீஸ் ரோட்டை ஆக்கிரமித்து வேலி அமைத்திருப்பதால் விவசாயிகள் விளை நிலங்களுக்கு விதைகள், உரங்கள், உள்ளிட்டவைகள் கொண்டு செல்ல முடிய வில்லை. அனைத்து பொருட்களும் தலைச்சுமையாகவே கொண்டு செல்ல வேண்டியுள்ளது. மேலும் விளைவித்த பொருட்களை ஏற்றி செல்ல டிராக்டர், லாரி, வேன் உள்ளிட்ட எந்த வாகனமும் வர முடியவில்லை.
இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது, நான்கு வழிச்சாலை பணிக்காக வழங்கிய நிலத்திற்கு இழப்பீடாக பணம் பெற்ற பின் நிலத்தையும் வேலி அமைத்து ஆக்கிரமித்துள்ளனர். விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

