/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ஆசிரியர் தகுதி தேர்வு 8738 பேருக்கு 7697 பேர் தேர்வினை எழுதினர்; இதில் 1041 பேர் ‛ஆப்சென்ட்

ADDED : நவ 16, 2025 11:01 PM
சிவகங்கை: சிவகங்கையில் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் தகுதி தேர்விற்கு 8,738 பேர் விண்ணப்பித்தும், தேர்வினை 7,697 பேர் எழுதியதில், 1,041 பேர் ஆப்சென்ட் ஆகினர்.
சிவகங்கை மாவட்டத்தில் இடைநிலை ஆசிரியர் தகுதி தேர்வு நேற்று முன்தினம் சிவகங்கை, மானாமதுரை, காளையார்கோவில், திருப்புத்துாரில் உள்ள 7 மையங்களில் நடந்தது. இதில் 1861 பேர் விண்ணப்பித்த நிலையில், தேர்வினை 1,619 பேர் மட்டுமே எழுதி, 242 பேர் ஆப்சென்ட் ஆகினர்.
நேற்று பட்டதாரி ஆசிரியர் தகுதி தேர்வினை மாவட்ட அளவில் உள்ள 22 தேர்வு மையங்களில் நடந்தது. இதில், பங்கேற்க 6,877 பேர் விண்ணப்பித்திருந்தனர்.
நேற்று நடந்த தேர்வில் 6,078 மாணவர்கள் மட்டு மே பங்கேற்றனர். இதில் 799 பேர் ஆப்சென்ட் ஆகினர். முதன்மை கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி தலைமையில் மாவட்ட கல்வி அலுவலர் மாரிமுத்து உள்ளிட்டோர் தேர்வுக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.