/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திருப்புத்துாரில் மழையை எதிர்பார்க்கும் விவசாயிகள் வறண்ட தடுப்பணைகள்

ADDED : நவ 09, 2025 07:03 AM

திருப்புத்துார்: திருப்புத்துார் பகுதியில் தொடர்ந்து மழை பெய்யாததால் விதைப்பு செய்த விவசாயிகள் பயிர் வளர்ச்சிக்காக மழையை எதிர்பார்த்துள்ளனர்.
பெய்த ஓரளவு மழை,கண்மாயில் இருந்த சிறிதளவு நீரை நம்பி திருப்புத்துார் வட்டாரத்தில் திருக்களாப்பட்டி,கே.வைரவன்பட்டி,புதுார்,காரையூர்,மகிபாலன்பட்டியில் பரவலாக விவசாயிகள் நேரடி விதைப்பு செய்துள்ளனர். ஆனால் தொடர்ந்து மழை பெய்யவில்லை. ஆறுகளிலும் நீர் வரத்து இல்லை.
இதனால் வடமாவளி அணைக்கட்டு, கோட்டையிருப்பு தடுப்பணை,திருவுடையார்பட்டி தடுப்பணை, மகிபாலன்பட்டி அணைக்கட்டு, கண்டவராயன்பட்டி தடுப்பணையில் தண்ணீர் சேகரமாகவில்லை. இதனால் பயிர்களின் வளர்ச்சிக்கு அடுத்த சிலநாட்களில் மழைக்காக விவசாயிகள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.