/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
காரைக்குடி - திண்டுக்கல் வரை ரயில் தடம் அமைக்க கோரிக்கை
/
காரைக்குடி - திண்டுக்கல் வரை ரயில் தடம் அமைக்க கோரிக்கை
காரைக்குடி - திண்டுக்கல் வரை ரயில் தடம் அமைக்க கோரிக்கை
காரைக்குடி - திண்டுக்கல் வரை ரயில் தடம் அமைக்க கோரிக்கை
ADDED : நவ 09, 2025 07:02 AM
காரைக்குடி: காரைக்குடி முதல் திண்டுக்கல் வரை புதிதாக ரயில் தடம் அமைக்க வேண்டும் என தென்னக ரயில்வே பொது மேலாளரை சந்தித்து கிழக்கு கடற்கரை ரயில் பயணிகள் கூட்டமைப்பினர் கோரிக்கை மனு அளித்தனர்.
கிழக்கு கடற்கரை ரயில் பயணிகள் கூட்டமைப்பு தலைவர் எஸ்.ஆர்.எம். பாலசுப்பிரமணியன் கூறுகையில்: தென்னக ரயில்வே பொது மேலாளரை சந்தித்து காரைக்குடி - திண்டுக்கல் வரை புதிய ரயில்பாதை அமைக்க வேண்டும். காரைக்குடி, தேவகோட்டை ரஸ்தா, மானகிரி, திருப்புத்துார், சிங்கம்புணரி,கொட்டாம்பட்டி, நத்தம், திண்டுக்கல் வரை ரயில் பாதை அமைக்க வேண்டும்.
இவ்வாறு அமைந்தால் காரைக்குடி மக்கள் மட்டுமின்றி தேவகோட்டை மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். மேலும் திண்டுக்கல் வழியாக பழநி, பொள்ளாச்சி, கோயம்புத்துார், பாலக்காடு வரை ரயில் பாதையை இணைக்க முடியும். இதன் மூலம் மாணவர்கள் வணிகர்கள் விவசாயிகள் பயனடைவர், என்றனர்.