/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கண்டவராயன்பட்டி ரோட்டில் மண் அரிப்பை தடுக்க சுவர்
/
கண்டவராயன்பட்டி ரோட்டில் மண் அரிப்பை தடுக்க சுவர்
ADDED : நவ 09, 2025 07:02 AM

திருப்புத்துார்: திருப்புத்துார் ஒன்றியம் கண்டவராயன்பட்டி பழையவளவில் கண்மாய் அருகே ரோட்டோரத்தில் தடுப்புச்சுவர் கட்ட கிராமத்தினர் கோரியுள்ளனர்.
கண்டவராயன்பட்டி பழைய வளைவு பகுதியில் பிளவக்கண்மாய் உள்ளது. கண்மாய் நீர்ப்பிடிப்பு பகுதியையொட்டி கண்டவராயன்பட்டி - - கே. வைரவன்பட்டி ரோடு செல்கிறது. மழை காலங்களில் கண்மாய் பெருகும் போது கடற்கரை போன்று கிராமம் காணப்படுகிறது. அப்போது கண்மாய் நீரலைகளால் பழையவளவில் பல இடங்களில் ரோட்டோர மண் அரிக்கப்படுகிறது. இதனால் ரோடும் சேதமடைகிறது. இதைத் தவிர்க்க கண்மாய் பகுதியில் மண் அரிப்புள்ள பகுதிகளில் தடுப்புச்சுவர் கட்டுவதோடு, வளைவு ரோட்டை நேராக மாற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராமத்தினர் கோரியுள்ளனர்.
கண்டவராயன்பட்டி குமார் கூறியதாவது, நீண்ட காலமாக கண்மாய் நீர் ரோட்டோர மண்ணை அரிப்பதைத் தடுக்க தடுப்புச்சுவர் கட்ட கோரி வருகிறோம். தடுப்புச்சுவர் கட்டினால் விரிவான ரோடு வசதி கிடைப்பதுடன் கண்மாய் நீர் கிராமத்திற்குள் நுழையும் வாய்ப்பும் தவிர்க்கப்படும் என்றார்.

