/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
காரைக்குடி கண்மாய்களில் கழிவு நீர் தேக்கம் விவசாயிகள் புலம்பல்
/
காரைக்குடி கண்மாய்களில் கழிவு நீர் தேக்கம் விவசாயிகள் புலம்பல்
காரைக்குடி கண்மாய்களில் கழிவு நீர் தேக்கம் விவசாயிகள் புலம்பல்
காரைக்குடி கண்மாய்களில் கழிவு நீர் தேக்கம் விவசாயிகள் புலம்பல்
ADDED : நவ 16, 2025 11:21 PM

காரைக்குடி: காரைக்குடியில் விவசாயத்தின் முக்கிய ஆதாரமான கண்மாய்கள் வரத்துக் கால்வாய்களில் கழிவுநீராக மாறியதால் விவசாயம் கேள்விக் குறியாகி வருகிறது.
காரைக்குடி நகரின் முக்கிய குடிநீர் ஆதாரமாக சம்பை ஊற்று உள்ளது. சம்பை ஊற்றின் முக்கிய நீர் ஆதாரமாக காரைக்குடி பெரிய, அதலை, கோனேரிக் கண்மாய்கள் உள்ளது. இங்குள்ள நாட்டார் கண்மாய் விவசாயத்தின் முக்கிய ஆதாரமாக உள்ளது. நாட்டார் கண்மாய் 120 ஏக்கர் பரப்பளவு கொண்டது. 5 மடை கொண்ட இக்கண்மாயை நம்பி 350 ஏக்கர் வரை விவசாயம் நடந்தது.
பாதரக்குடி, பேயன்பட்டி, சிறுவயல், கோவிலுார் பகுதியிலிருந்து மழைநீர் வரத்து கால்வாய் மூலம் இக்கண்மாயை வந்தடையும். இவ்வாறான கண்மாய் கடந்த பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் கிடப்பதோடு, ஆகாயத்தாமரை, கருவேல மரங்கள் வளர்ந்து கிடக்கிறது. தவிர காரைக்குடி பகுதியில் உள்ள கழிவுநீர் வரத்து கால்வாய் வழியாக இக்கண்மாயை வந்தடைவதால் மொத்த தண்ணீரும் சாக்கடையாக மாறி உள்ளது. இதனால் விவசாயம் கேள்விக்குறியாகி உள்ளது.
தற்போது பெய்து வரும் மழையால் கண்மாயிலிருந்து மடைகள் வழியாக தண்ணீர் வெளியேறி வருகிறது. தண்ணீர் முழுவதும் சாக்கடையாக துர்நாற்றத்துடன் இருப்பதால் விவசாயிகள் கவலை அடைந்து வருகின்றனர்.

