/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பள்ளி வகுப்பறையில் வட்டாரக் கல்வி அலுவலகம்; துணை முதல்வரிடம் ஆசிரியர்கள் மனு
/
பள்ளி வகுப்பறையில் வட்டாரக் கல்வி அலுவலகம்; துணை முதல்வரிடம் ஆசிரியர்கள் மனு
பள்ளி வகுப்பறையில் வட்டாரக் கல்வி அலுவலகம்; துணை முதல்வரிடம் ஆசிரியர்கள் மனு
பள்ளி வகுப்பறையில் வட்டாரக் கல்வி அலுவலகம்; துணை முதல்வரிடம் ஆசிரியர்கள் மனு
ADDED : நவ 16, 2025 11:20 PM
சிங்கம்புணரி: சிங்கம்புணரியில் பள்ளி வளாகத்தில் மாணவர்களுக்கு இடையூறாக செயல்படும் வட்டார கல்வி அலுவலகத்திற்கு சொந்த கட்டிடம் கட்டித் தர உதயநிதியின் உதவியை ஆசிரியர்கள் நாடியுள்ளனர்.
இவ்வொன்றியத்தில் உள்ள 67 தொடக்க, நடுநிலைப்பள்ளிகளுக்கான வட்டாரக்கல்வி அலுவலகத்திற்கு சொந்தக் கட்டிடம் இல்லாததால் வாடகை கட்டிடத்தில் செயல்பட்டு வந்தது.
தற்போது 10 ஆண்டுகளாக சிங்கம்புணரி பள்ளி எண் 2ல் உள்ள வகுப்பறையில் தற்காலிகமாக இயங்கி வருகிறது. இட நெருக்கடியால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதாக பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
வட்டாரக் கல்வி அலுவலகத்திற்கு சொந்த கட்டிடம் கட்ட இடம் ஒதுக்கீடு செய்ய பேரூராட்சி நிர்வாகத்திடம் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை வைத்தன் அடிப்படையில் சிங்கம்புணரி 5வது வார்டிற்கு உட்பட்ட நியூ காலனியில் உள்ள காலியிடத்தில் இடம் ஒதுக்கீடு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதனை தொடர்ந்து சில நடைமுறை சிக்கல்களால் உடனடியாக கட்டிடம் கட்டவில்லை. இதனால் பள்ளியிலேயே அலுவலகம் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.
இதனால் மாணவர்களின் கற்றல், கற்பித்தல் பணி பாதிக்கப்படுகிறது. ஆசிரியர்களின் 50 ஆண்டு கால கனவை நிறைவேற்றும் பொருட்டு சிங்கம்புணரி வட்டாரக் கல்வி அலுவலகத்திற்கு ஒதுக்கப்பட்ட இடத்தை உறுதி செய்து, புதிய அலுவலக கட்டிடம் கட்டித் தருமாறு சிங்கம்புணரி வந்த துணை முதல்வர் உதயநிதியிடம் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

