/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மானாமதுரையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
/
மானாமதுரையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
ADDED : ஏப் 04, 2025 05:44 AM

மானாமதுரை: மானாமதுரையில், எம்புரான் திரைப்படம் நடக்கும் தியேட்டர் முன் விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
நடிகர்கள் மோகன்லால், பிரித்திவிராஜ் நடித்த எம்புரான் படத்திற்கு தடை விதிக்க கோரி, விவசாய சங்கத்தினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று மானாமதுரையில் பூர்வீக வைகை பாசன விவசாய கூட்டமைப்பு சார்பில், விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு, முல்லை பெரியாறு, வைகை பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கூட்டமைப்பு பொது செயலாளர் ஆதிமூலம், தென்மண்டல தலைவர் மாணிக்கவாசகம், வைகை பாசன சங்க நிர்வாகி மதுரைவீரன், மாவட்ட தலைவர் ராமலிங்கம், மாவட்ட பொருளாளர் மாயாண்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.