/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
வாடுகிறது போதிய தண்ணீர் இல்லாமல் நெற்பயிர் தண்ணீர் திறக்க விவசாயிகள் வேண்டுகோள்
/
வாடுகிறது போதிய தண்ணீர் இல்லாமல் நெற்பயிர் தண்ணீர் திறக்க விவசாயிகள் வேண்டுகோள்
வாடுகிறது போதிய தண்ணீர் இல்லாமல் நெற்பயிர் தண்ணீர் திறக்க விவசாயிகள் வேண்டுகோள்
வாடுகிறது போதிய தண்ணீர் இல்லாமல் நெற்பயிர் தண்ணீர் திறக்க விவசாயிகள் வேண்டுகோள்
ADDED : டிச 16, 2025 05:53 AM

இளையான்குடி, இளையான்குடி, மானாமதுரை பகுதியில் நெற்பயிர் நன்றாக வளர்ந்து பரிந்து வரும் நிலையில் போதிய தண்ணீர் இல்லாததால் விவசாயிகள் வைகையில் தண்ணீர் திறந்து விட வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இளையான்குடி தாலுகாவிற்குட்பட்ட பகுதிகளில் நீர்வளத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள 30க்கும் மேற்பட்ட கண்மாய்களுக்கு வைகை ஆற்றிலிருந்து கால்வாய்கள் மூலம் தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. மேலும் ஊராட்சி ஒன்றியத்தின் கட்டுப்பாட்டின் கீழ் நுாற்றுக்கும் மேற்பட்ட கண்மாய்களும் உள்ள நிலையில் பெய்கிற மழையை வைத்து பெரும்பாலான விவசாயிகள் மானாவாரியாக நெல் விதைகளை துாவி விவசாயம் செய்கின்றனர்.
கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்பு பெய்த மழையை நம்பி விவசாய பணிகளை துவக்கிய விவசாயிகள் தொடர்ந்து பெய்த மழையினால் தற்போது வரை நெற்பயிர்கள் நன்றாக வளர்ந்து பரிச்சல் ஏற்பட்டு வருகிறது.
மீதமுள்ள நாட்களுக்கு நெற்பயிர்களுக்கு போதிய தண்ணீர் இல்லாததால் விவசாயிகள் என்ன செய்வதென்று தெரியாமல் கவலையில் உள்ளனர். சிவகங்கை மாவட்டத்தின் 2வது பெரிய கண்மாயான நெட்டூர் கண்மாய் மூலம் பல கிராமங்களில் விவசாய பணிகள் நடைபெற்று வருகிறது. இக்கண்மாய்க்கு கடந்த ஒரு மாதங்களுக்கு முன்பு வைகை ஆற்றில் இருந்து தண்ணீர் வந்தது. தற்போது குறைந்த அளவு தண்ணீர் உள்ள நிலையில் இன்னும் சில நாட்களுக்கே மட்டுமே உதவும். மழையும் பெய்யாமல் இருப்பதினால் பயிர்கள் வாடத் துவங்கியுள்ளன. இதேபோன்று இளையான்குடி பகுதியில் உள்ள மற்ற கண்மாய்களுக்கு வைகை தண்ணீர் செல்லாத நிலையில் மேற்கண்ட கிராமங்களிலும் நெற்பயிர்கள் வாட துவங்கி உள்ளனர்.
நெட்டூர் கண்மாய் நீர் பாசன சங்கத் தலைவர் கூறியதாவது:
நெட்டூர் கண்மாய் மூலம் 3 ஆயிரம் ஏக்கர் பரப்புள்ள விவசாய நிலங்கள் பயன்பெற்று வருகின்றன. ஆனால் கடந்த மாதம் வைகை ஆற்றில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் சிறிதளவே கண்மாய்க்கு வந்ததால் விவசாயிகள் சிரமப்பட்டு வருகிறோம். நெற்பயிர்கள் நன்றாக பரிச்சல் ஏற்பட்டு வரும் நிலையில் தற்போது தண்ணீர் இல்லாமல் காய்ந்து வருகின்றன. ஆகவே மாவட்ட நிர்வாகம் இளையான்குடி மற்றும் மானாமதுரை பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற உடனடியாக வைகை ஆற்றில் தண்ணீர் திறந்து விட வேண்டும் என்றார்.

