/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திருப்புத்துாரில் சீரான குடிநீர் சப்ளை இல்லை
/
திருப்புத்துாரில் சீரான குடிநீர் சப்ளை இல்லை
ADDED : டிச 16, 2025 05:54 AM
திருப்புத்துார்: திருப்புத்துாரில் குடிநீர் திட்டப்பணிகளை விரைவுபடுத்தி குடிநீர் விநியோகத்தை சீரமைக்க பொதுமக்கள் கோரி யுள்ளனர்.
திருப்புத்துாரில் ராமநாத புரம் காவிரிக் கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் விநியோகம் நடைபெறுகிறது. தினசரி சீரான குடிநீர் விநியோகம் இல்லை. 2 நாட்களுக்கு ஒரு முறை அல்லது கூடுதலான இடைவெளியில் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது.
அம்ரூத் 2.0 என்ற திட்டத்தில் குடிநீர் விஸ் தரிப்பு அனுமதி யானது. 2 ஆண்டு களாக திட்டப்பணி நடந்து வருகிறது. புதிய குடிநீர் திட்டத்தில் குடிநீர் விநியோக சோதனையின் போது ஒரே இடத்தில் உள்ள வீடுகளில் சிலருக்கு தண்ணீர் வருகிறது. சிலருக்கு வருவதில்லை.
குடிநீர்த் திட்டப்பணிகளை கூடுதல் பணியாளர் களுடன் ஆய்வு செய்து, திட்டப் பணிகளை முழுமைப்படுத்தி நகரில் சீரான குடிநீர் விநி யோகம் செய்ய வேண்டு மென மக்கள் எதிர் பார்க்கின்றனர்.

