/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கண்மாய்க்கு தண்ணீர் செல்ல போராடும் விவசாயிகள்
/
கண்மாய்க்கு தண்ணீர் செல்ல போராடும் விவசாயிகள்
ADDED : நவ 24, 2024 07:39 AM

சிங்கம்புணரி : சிங்கம்புணரி அருகே பாலாற்று தண்ணீரை கண்மாய்க்கு கொண்டு செல்ல விவசாயிகள் இரவு பகலாக பாடுபட்டு வருகின்றனர்.
இப்பகுதியில் ஓடும் பாலாற்றில் இருந்து அருகே உள்ள கண்மாய்களுக்கு தண்ணீர் செல்ல வரத்துக் கால்வாய் உள்ளது. பாலாற்றில் ராஜாக்கால் அணையில் இருந்து தண்ணீர் மட்டிக்கண்மாய் செல்ல பிரதான காய்வாய் உள்ளது.
இதன் வழியாகவே மட்டிக்கண்மாய்க்கும் அருகே உள்ள கோயில் கண்மாய்க்கும் தண்ணீர் கொண்டு செல்லப்படும்
சில வருடங்களாக மட்டிக்கண்மாய்க்கு செல்லும் பிரதான கால்வாயின் ஆழம் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டதால் கோயில் கண்மாய்க்கு தண்ணீர் கொண்டு செல்ல முடியவில்லை.
இப்பகுதியில் கடந்த ஒரு மாதமாக பரவலாக மழை பெய்து மட்டிக்கண்மாய் மறுகால் பாய்ந்த நிலையிலும் கோயில் கண்மாயில் சொட்டு நீர் கூட சென்று சேரவில்லை. கண்மாய் வறண்டு காணப்படுகிறது. இந்நிலையில் கண்மாய் ஆயக்கட்டு தாரர்கள் சார்பில் மட்டிக் கண்மாய் கால்வாயில் மணல் மூடைகளை அடுக்கி தண்ணீரை கோயில் கண்மாய்க்கு திருப்பி வருகின்றனர். ஆனாலும் ஆழம் அதிகம் என்பதால் மண் கரைந்து குறைந்த அளவு தண்ணீரே கண்மாய்க்கு செல்கிறது. மழைக்கு முன்பாகவே கால்வாய் அமைப்பை கணக்கிட்டு அந்த இடத்தில் தடுப்பணை கட்டி ஷட்டர்கள் அமைத்திருந்தால் பிரச்னை ஏற்பட்டிருக்காது.
இனியாவது வருங்காலங்களில் கதவுகளுடன் கூடிய தடுப்பணை அமைத்து இரண்டு கண்மாய்களுக்கும் தண்ணீர் செல்வதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.

