/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
நெற்பயிரில் நோய் தாக்குதலால் விவசாயிகள் அவதி
/
நெற்பயிரில் நோய் தாக்குதலால் விவசாயிகள் அவதி
ADDED : நவ 11, 2025 11:59 PM

சிங்கம்புணரி: சிங்கம்புணரி பகுதியில் நெற்பயிர்களில் நோய் தாக்க துவங்கியுள்ளதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
சிங்கம்புணரி, ம.கோவில்பட்டி, ஒடுவன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் நடவுப் பணிகளை துவக்கி உள்ளனர். பருவமழை போதிய அளவு பொய்யாத நிலையில் பணிகள் தாமதமாகவே துவக்கப்பட்டன. பருவநிலை மாற்றம் உள்ளிட்ட காரணங்களால் பயிரில் செந்தாழை பாதிப்பு மற்றும் பூச்சி தாக்குதல் காணப்படுகிறது.
நடவு பணிகள் முடிந்து சில நாட்களிலேயே நோய் தாக்குதல் ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர். சில இடங்களில் தண்ணீர் பற்றாக்குறையால் வயல்கள் வறண்டு காணப்படுகிறது. இனி மழை பெய்தால் மட்டுமே பயிர்கள் வளரும் என்ற நிலையில் நோய் தாக்குதல் பயிர்களுக்கு சேதத்தை ஏற்படுத்துகிறது. பாதிக்கப்பட்ட பகுதியில் வேளாண் துறையினர் ஆய்வு செய்து விவசாயிகளுக்கு உரிய ஆலோசனை வழங்க வேண்டும்.

