ADDED : நவ 11, 2025 11:58 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: தமிழ்நாடு மக்கள் நலப் பணியாளர்கள் சங்கம் சார்பில் தி.மு.க., தேர்தல் வாக்குறுதியான பணி நிரந்தரம் உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சிவகங்கை அரண்மனை வாசல் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் முத்துராமலிங்கம் தலைமை வகித்தார். மாவட்ட துணை தலைவர் மனோகரன் வரவேற்றார். முன்னாள் மாவட்ட தலைவர் செல்வம், ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கம் மாவட்ட செயலாளர் சங்கரசுப்பரமணியன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் மாவட்ட செயலாளர் ஜெய்பிரகாஷ் வாழ்த்தி பேசினர். மாவட்ட செயலாளர் சுரேஷ்குமார் கோரிக்கை விளக்கி பேசினார். மலைக்கண்ணன், அன்புச்செல்வி, சந்திரன், பூமிநாதன், அழகர்சாமி, சங்கர் கணேஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். மாவட்ட பொருளாளர் செல்வி நன்றி கூறினார்.

