/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மானாமதுரையில் சுட்டெரிக்கும் வெயில் மின்வெட்டால் விவசாயிகள் அவதி
/
மானாமதுரையில் சுட்டெரிக்கும் வெயில் மின்வெட்டால் விவசாயிகள் அவதி
மானாமதுரையில் சுட்டெரிக்கும் வெயில் மின்வெட்டால் விவசாயிகள் அவதி
மானாமதுரையில் சுட்டெரிக்கும் வெயில் மின்வெட்டால் விவசாயிகள் அவதி
ADDED : செப் 21, 2024 05:33 AM
மானாமதுரை: மானாமதுரை சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில வாரங்களாக வெயில் கடுமையாக காணப்படுகிறது. வெப்பம் தாங்க முடியாமல் மக்கள் அவதிக்குள்ளாகி வரும் நிலையில் அடிக்கடி ஏற்படும் மின் வெட்டினால் பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் விவசாயிகள் சிரமப்படுகின்றனர்.
மானாமதுரையில் கடந்த சில வாரங்களாக வெப்பம் தாங்க முடியாமல் இரவில் மக்கள் சிரமப்பட்டு வரும் நிலையில் நகர், கிராம பகுதிகளிலும் அடிக்கடி ஏற்படும் மின் வெட்டினாலும் அவதிப்பட்டு வருகின்றனர்.
நகர் பகுதிகளில் ஏற்படும் மின்வெட்டு உடனடியாக சரி செய்யப்படும் நிலையில் கிராமப் பகுதிகளில் மின்வெட்டு ஏற்பட்டால் அதனை சரி செய்ய நீண்ட நாட்கள் ஆகிறது.
கிராம மக்கள் கூறியதாவது: தற்போது கோடை காலம் போல வெயில் காணப்படுவதால் பயிர்களுக்கு தேவையான தண்ணீரை உரிய நேரத்தில் பாய்ச்ச முடியவில்லை.
மேலும் கடந்த சில நாட்களாக ஏற்படும் மின் வெட்டினால் பம்பு செட்களை இயக்க முடியாத நிலையினால் இருக்கிற தண்ணீரையும் பயிர்களுக்கு பாய்ச்ச முடியாத சூழ் நிலை ஏற்பட்டு வருகிறது. பயிர்கள் வாடி வருகின்றன. மின்வாரிய அதிகாரிகள் மின்வெட்டை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.