/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மாடுகளுக்கு பயந்து எள் சாகுபடிக்கு மாறிய விவசாயிகள்
/
மாடுகளுக்கு பயந்து எள் சாகுபடிக்கு மாறிய விவசாயிகள்
மாடுகளுக்கு பயந்து எள் சாகுபடிக்கு மாறிய விவசாயிகள்
மாடுகளுக்கு பயந்து எள் சாகுபடிக்கு மாறிய விவசாயிகள்
ADDED : ஏப் 02, 2025 06:37 AM
சிங்கம்புணரி : சிங்கம்புணரியில் பயிர்களை நாசம் செய்யும் கோயில் மாடுகளுக்கு பயந்து விவசாயிகள் எள் சாகுபடிக்கு மாறி வருகின்றனர்.
இங்குள்ள சேவுகப்பெருமாள் கோயிலுக்கு பக்தர்கள் நேர்த்திக்கடனாக விட்ட 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாடுகள் அப்பகுதி காடு, வயல்களில் சுற்றித்திரிகின்றன.
இவை விவசாய நிலங்களில் பயிர்களை சேதப்படுத்துவதால் பிரான்மலை, ஒடுவன்பட்டி, கிருங்காக்கோட்டை, சேர்வைகாரன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் பல ஏக்கர் பரப்பில் எந்த விவசாயமும் நடைபெறவில்லை.
இதனால் பல விவசாயிகள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர். இந்நிலையில் சிலர் கால்நடைகள் தீண்டாத எள் பயிரை சாகுபடி செய்துள்ளனர்.
சுப்பிரமணி, சேர்வைகாரன்பட்டி: எள் பயிரிட்டால் நிலத்தின் சத்துக்களைஉறிஞ்சி அடுத்ததாக கடலை போன்ற பயிர்கள்போடமுடியாது.
இருந்தாலும் மாடுகள் பிரச்னையால் வேறு வழியில்லாமல் எள் சாகுபடி செய்து உள்ளேன்.
இப்பகுதியில் கோயில் மாடுகளால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
எனவே மாவட்ட நிர்வாகம் மாடுகளை அடைத்து வைத்து பராமரிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்.