/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கோடை விவசாயத்தை கைவிட்ட விவசாயிகள்
/
கோடை விவசாயத்தை கைவிட்ட விவசாயிகள்
ADDED : ஜூன் 21, 2025 11:36 PM

காரைக்குடி: சாக்கோட்டை அருகே கால்நடைகளால் விவசாயம் பாதிக்கப்படுவதாக கூறி விவசாயிகள் கோடை விவசாயத்தை கைவிட்டுள்ளனர்.
சாக்கோட்டை வட்டாரத்தில் 4 ஆயிரத்து 500 எக்டேரில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. பெரும்பாலும் மானாவாரி விவசாயமே நடைபெறுகிறது.சாக்கவயல் ஊராட்சிக்குட்பட்ட பெரிய காட்டுகுறிச்சி பகுதியில் 50 ஏக்கரில் பெரிய கண்மாயை விவசாயம் நடந்து வருகிறது.
பல பகுதிகளில் கோடை விவசாயம் நடந்து வரும் நிலையில், பெரிய காட்டுக்குறிச்சி பகுதியில் மட்டும் விவசாயம் கைவிடப்பட்டுள்ளது. கால்நடைகளால் விவசாயம் செய்தும் பயனில்லாமல் போவதால், கோடை விவசாயத்தை கைவிட்டதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்,
விவசாயி பெரியசாமி கூறுகையில்: பெரிய காட்டு குறிச்சி கண்மாயை நம்பி ஆண்டுதோறும் விவசாயம் நடைபெறும். ஆடியில் விதைப்பில் ஈடுபடுவோம்.
தை அறுவடை பணி நடைபெறும். தொடர்ந்து கோடை விவசாயத்தில் ஈடுபடுவோம். ஆனால் தற்போது கோடை விவசாயத்தை கைவிடும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஒரு சிலர் மட்டுமே கோடை விவசாயம் செய்வதால், மாடுகளிடம் இருந்து பயிர்களை காப்பாற்ற முடிவதில்லை. கால்நடை வளர்ப்போர் விவசாயம் செய்வது குறித்து கண்டு கொள்வதில்லை.
மாடுகளை அவிழ்த்து விடுகின்றனர். மாடுகள் மொத்தமாக வயலில் இறங்கி பயிர்களை நாசம் செய்கிறது.
இதனால் அனைவரும் விவசாயம் செய்யும் போது மட்டுமே விவசாயம் செய்ய வேண்டியுள்ளது.
கோடை விவசாயம் என்பதே கேள்விக்குறியாகி விட்டது.