/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
நாற்றங்காலை சேதப்படுத்தும் விலங்குகள் விவசாயிகள் தவிப்பு
/
நாற்றங்காலை சேதப்படுத்தும் விலங்குகள் விவசாயிகள் தவிப்பு
நாற்றங்காலை சேதப்படுத்தும் விலங்குகள் விவசாயிகள் தவிப்பு
நாற்றங்காலை சேதப்படுத்தும் விலங்குகள் விவசாயிகள் தவிப்பு
ADDED : செப் 29, 2025 06:14 AM
திருப்புவனம் : திருப்புவனம் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாய பணிகள் தொடங்கியுள்ள நிலையில் இரவு நேரங்களில் பன்றிகள் நாற்றங்காலை சேதப்படுத்துவதால் விவசாயிகள் செய்வதறியாது திகைத்து வருகின்றனர்.
திருப்புவனம் வட்டாரத்தில் சம்பா பருவத்தில் மூவாயிரம் ஹெக்டேரில் நெல் நடவு செய்வது வழக்கம், என்.எல்.ஆர்., அண்ணா ஆர் 4, அட்சயா, ஐ.ஆர்.20 உள்ளிட்ட நெல் ரகங்கள் பயிரிட விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். கூலி ஆட்கள் தட்டுப்பாடு காரணமாக நேரடி விதைப்பில் திருப்பாச்சேத்தி விவசாயிகள் ஈடுபட்டு வரும் நிலையில் மணல்மேடு, பெத்தானேந்தல், கணக்கன்குடி உள்ளிட்ட பகுதிகளில் நாற்றங்கால் அமைக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
வரப்பு வெட்ட, உழவு பணி, விதை நெல் என ஏக்கருக்கு 10 முதல் 15 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்து வருகின்றனர்.
நெல் விதைப்பு வயல்கள், நாற்றங்கால்களில் கிணற்று பாசனம் மூலம் தண்ணீர் பாய்ச்சி வருகின்றனர். கடும் வெயில் காரணமாக இரவு நேரத்தில் கூட்டம் கூட்டமாக வரும் பன்றிகள் நாற்றங்காலில் படுத்து உருள்வதால் முளைப்பு திறன் இன்றி விதை நெல் சேதமடைந்து வருகிறது.
இரவு நேரத்தில் கூட்டம் கூட்டமாக வரும் பன்றிகளை விரட்ட முடியாமல் விவசாயிகள் தவிப்பிற்குள்ளாகி வருகின்றனர். கூட்டமாக வரும் பன்றிகளை கண்டு நாய்கள் ஓடிவிடுகின்றன.