/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மானாமதுரையில் வதைக்கும் வெயில் மழை இல்லாமல் விவசாயிகள் ஏக்கம்
/
மானாமதுரையில் வதைக்கும் வெயில் மழை இல்லாமல் விவசாயிகள் ஏக்கம்
மானாமதுரையில் வதைக்கும் வெயில் மழை இல்லாமல் விவசாயிகள் ஏக்கம்
மானாமதுரையில் வதைக்கும் வெயில் மழை இல்லாமல் விவசாயிகள் ஏக்கம்
ADDED : ஆக 30, 2025 03:54 AM

மானாமதுரை: மானாமதுரை,இளையான்குடி பகுதிகளில் வெயில் வாட்டி வதைப்பதோடு மழை இல்லாததால் ஆடிப்பட்டத்தில் விவசாய பணிகளை துவக்கிய விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
மானாமதுரை,இளையான்குடி பகுதியில் கடந்த சில வாரங்களாக வெயில் வாட்டி வருகிறது.
கடந்த ஆடிப்பட்டத்தின் போது விவசாய பணிகளை துவக்கிய விவசாயிகள் கடந்த சில நாட்களாக இளையான்குடி பகுதியில் மானாவாரியாக விதை நெல்களை துாவி வரு கின்றனர்.
ஆனால் மழை இல்லாத காரணத்தினால் விதை நெல் முளைக்காமல் பறவைகள் விதை நெல்களை இரையாக்கி விடுவதால் மேலும் நஷ்டம் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து இளையான்குடியை சேர்ந்த விவசாயிகள் கூறியதாவது: இளையான்குடியில் குண்டு மிளகாய்க்கு அடுத்தபடியாக விவசாயிகள் நெல் விவசாயம் செய்து வருகின்றனர்.பெரும்பாலான விவசாயிகள் மானாவாரியாக விதை நெல்களை துாவி விவசாயம் செய்து வரும் நிலையில் மழை இல்லாததால் நஷ்டம் ஏற்படும் சூழ்நிலை உள்ளது. நெட்டூர் கண்மாய்க்குட்பட்ட வைகை பாசன பகுதிகளிலும் இதே நிலை தொடர்வதால் தற்போது வைகை அணையில் போதுமான தண்ணீர் உள்ளதால் உடனடியாக இப்பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற தண்ணீர் திறந்து விட வேண்டும் என்றனர்.